மதுரை கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூபாய் ஆயிரம் பட்டுவாடா செய்ய திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சென்ற ரகசிய தகவலை தொடர்ந்து கையும் களவுமாக பிடிக்க தேர்தல் ஆணையம் பொறி வைத்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் தொகுதியில் மதுரை கிழக்கு தொகுதி முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
அடாவடிக்கு பெயர் பெற்ற திமுக சிட்டிங் எம்.எல்.ஏ மூர்த்தி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து அதிமுக முன்னால் மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார், இந்நிலையில் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது, இதற்கு முன் மூர்த்தி ஈடுபட்ட அடாவடி செயல்களை அதிமுக வேட்பாளர் தரப்பில் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், அந்த தொகுதி மக்கள் திமுக வேட்பாளர் மூர்த்திக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.
மேலும் மதுரை மாவட்டத்தில் திமுக முக்கிய புள்ளியாக வலம் வரும் மூர்த்தி, கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையை கொடுப்பது இல்லை என்கிற குற்றசாட்டு பரவலாக உள்ளது, இதனை தொடர்ந்து மூர்த்தி இந்த தோல்வி அடைந்து அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டால் தான், கட்சியில் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என மனநிலையில் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக தேர்தல் பணி மந்தமாக உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினால் தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி பெற்று விடும் என்று ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க மூர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து முன்கூட்டியே தனது கட்சி நிர்வாகிகளை பகுதி வாரியாக பிரித்து, ஒவ்வொரு நிர்வாகி வசம் பணம் ஏற்கனவே ஒப்படைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு பணம் பட்டுவாடா செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து திமுக வேட்பளார் மூர்த்தி பணம் பட்டுவாடா செய்ய தயார் நிலையில் இருப்பது தொடர்பாக ரகசிய தகவல் தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது, ரகசிய தகவல் கொடுத்தவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது உங்களுக்கு தகவல் தருகிறோம் உடனே வாருங்கள் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை கிழக்கு தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.