திமுக பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் கொலை பசியில் ஆட்சியை பிடித்தது. திமுக மீண்டும் அடுத்து ஆட்சிக்கு வருவோமா.? இல்லையா.? என்று தெரியாது, ஆகையால் இந்த ஐந்து வருடத்தில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடித்து விட வேண்டும் என்று திமுகவினர் எல்லை மீறி அடிக்கும் கொள்ளையில் தாக்குப் பிடிக்காமல் தமிழ்நாடே வேண்டாம் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஓடி வருகிறது.
பொதுவாக புதியதாக ஒரு கம்பெனி ஒரு மாநிலத்திற்கு வருகிறது என்றால், அந்த கம்பெனிக்கு தேவையான இடம் மற்றும் மின்சாரம் இவை அனைத்தையும் அந்த மாநிலத்தைச் சார்ந்த அரசாங்கம் ஏற்பாடு செய்து தர வேண்டும். அப்படி ஒரு நிறுவனம்திற்கு இடம் ஏற்பாடு செய்து தரும்பொழுது, அந்த மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் சுமார் நான்கு சதவீதம் வரை கமிஷன் பெறுவது வழக்கம்.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு புதிய நிறுவனம் வருகிறது என்றால், அந்த இடத்தை ஏற்பாடு செய்து தருவதற்கு சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை திமுக அரசியல்வாதிகள் கமிஷன் கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் இதைத் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்கள் ஒருவேளை உள்ளே வந்தாலும் அடுத்தடுத்து ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் திமுக அரசு கேட்கும் கமிஷன் அவர்களுக்கு தலையே சுத்தி விடுகிறதாம்.
இதனால் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வரும் நிறுவனங்கள், தமிழ்நாடு வேண்டாம் என்று முடிவெடுத்து வருகிறார்கள், மேலும் ஒரு நிறுவனம் ஒரு மாநிலத்திற்கு வருகிறது என்றால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருந்தால் மட்டுமே அந்த கம்பெனியை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரன் பண்ண முடியும்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை புதிதாக வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 10,000 கோடி முதலீடு திமுக ஆட்சியாளர்கள் கேட்ட கொள்ளை கமிஷனனால் கைவிட்டு போன தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி எந்தெந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்கலாம் என்று வந்து வேண்டாம் என்று வெளியேறியது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகப் புகழ்பெற்ற எல்ஜி நிறுவனம் சுமார் 5000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தயாராக இருந்தனர். ஆனால் இடம் தயார் செய்து தருவதற்கு இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் கேட்ட கொள்ளை கமிஷனால், அவர்கள் தமிழ்நாட்டில் தொடங்குவோமா.? வேண்டாமா.? என்று ஒரு யோசனையில் இருந்த போது,
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நீங்கள் ஆந்திராவிற்கு வாருங்கள் உங்களுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று அல்லாக்க லட்டு மாதிரி சுமார் 5000 கோடி முதலீட்டை ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சிட்டிக்கு கொண்டு சென்று விட்டார் சந்திரபாபு நாயுடு. அதேபோன்று கேரியர் குளோபல் என்கின்ற ஒரு நிறுவனம், சுமார் 2000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கயிருந்தது.
சஅக்ரீமெண்டில் கையெழுத்து போட தயாரான இந்த நிறுவனம் திமுக ஆட்சியாளர்கள் கேட்ட கொள்ளை கமிஷனரால் ஆந்திராவிற்கு அவர்களும் சென்று விட்டார்கள். அதேபோன்று இன்னும் சில முக்கிய கம்பெனிகள் 2 ஆயிரம் கோடி, 5 ஆயிரம் கோடி முதலீட்டில் வருவதாக இருந்த நிலையில், இங்கே திமுக ஆட்சியாளர்கள் கேட்கும் கொள்ளை கமிஷனர் அவர்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு சென்று விட்டார்கள்.
அந்த வகையில் தமிழக முதல்வர் வெளிநாட்டிற்கு பயணம் செய்து 4000 கோடி முதலீடை ஈற்றார், 5000 கோடி முதலிடம் ஈற்றார் என்று இதற்கு முன்பு பரவலாக பேசிய நிலையில், அப்படி எந்த முதலிடை இதுவரை கொண்டு வந்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியா இருக்கிறது. மேலும் மீண்டும் திமுக ஆட்சி அமைக்குமா? என்கின்ற சந்தேகத்தில் இருக்கும் வரை சம்பாதித்து கொள்வோம் என்று திமுக ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளையில், பிரபல நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு தெறித்து ஓடுவது தமிழகத்தின் மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.