டிஸ்மிஸ் ஆகும் திமுக அரசு… அமலாக்க துறை சமர்ப்பித்த ஆதாரம்… நீதிமன்றம் சென்ற திமுக…

0
Follow on Google News

சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் தொடர்பாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்க துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு மனுவும், இரண்டாவதாக விசாரணை என்கின்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,

மூன்றாவது கடந்த ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது அமலாக்க துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று மூன்று மனுக்களை தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மனுகளையும் விசாரித்த நீதிமன்றம் வரும் செவ்வாய் கிழமை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து, வரும் திங்கட்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்கின்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட முக்கியமான வாதங்களில், அமலாக்கத்துறைக்கு மாநில அரசின் அனுமதி இல்லாமல் இப்படி டாஸ்மாக் துறையில் சோதனை செய்வதற்கு அதிகாரமே இல்லை என்று தமிழக அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது, இந்த நிலையில் டாஸ்மாக் துறை ஒரு பொதுத்துறை, அந்த நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள சில எஃப் ஐ ஆர் இன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டார்கள்.

மேலும் டாஸ்மாக்கில் ஊழல் நடப்பது என்பது உலகம் அறிந்த ஒன்று, அதையும் தாண்டி பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படுவது வெட்ட வெளிச்சமானது. அப்படி இருக்கும் பொழுது தமிழக அரசு இந்த டாஸ்மாக் தொடர்பான விவகாரங்களில் அமலாக்கத்துறை தலையிடக்கூடாது என்று கூறுவதற்கு பதிலாக, ஒரு பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலை அவர்கள் கட்டுக்குள் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று அமலாக்கத்துறை டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அதிரடியாக சோதனையை மேற்கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட வேண்டிய நிலை வந்திருக்காது.

அந்த வகையில் தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யாத காரணத்தினால் , குறிப்பாக டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததை அமலாக்கத்துறை உறுதி செய்யப்பட்டு, மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதை உறுதி செய்த பின்னரே சோதனைக்கு வந்தனர் .

இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதை, தொடர்ந்து தான் தமிழக அரசு மீது இன்னும் ஆழமான சந்தேகம் வருகிறது. காரணம் சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் மிகப்பெரிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் ஒரு அரசின் பொது துறையிலேயே இப்படி ஒரு ஊழல் நடந்திருந்தால், அந்த அரசு செயல் இழந்து விட்டது என்றும், மேலும் இந்த ஊழல் காரணத்திற்காக ஆட்சியை கலைக்கும் சூழல் கூட உருவாகலாம் என்று கூறப்படும் நிலையில் தான், தற்பொழுது திமுக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கதறி வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here