மதம் மாற கட்டாயம்.. மனம் உடைந்த மாணவி தற்கொலை..! தமிழக்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ..!

0
Follow on Google News

கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயின் மகள் லாவண்யா வயது 17. இவர் அரியலூர் மாவட்டத் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல், மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து உள்ளார். பள்ளியில் மிக நன்றாகப் படிக்கும் இந்த மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, சிஸ்டர் சகாயமேரி என்பவர், இவரை மதம் மாறச் சொல்லி, தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். மாணவியின் பெற்றோர்களையும் சந்தித்து அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியும் மாணவியின் பெற்றோரும் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், மாணவியை படிக்க விடாது விடுதியின் கணக்கு வழக்குகளையும் மற்ற இதர வேலைகளையும் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துள்ளார்.

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், மனம் உடைந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொள்ள பள்ளியில் இருந்த விஷத் தன்மைகொண்ட திரவத்தை
அருந்தியுள்ளார். தொடர்ந்து வாந்தியும் உடல்நலக்கேடும் ஏற்பட்டதால் மாணவியை பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்து விட்டனர். அரசுமருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.

பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்திற்கு முன் மரணத்திற்கு முன் மாணவி பேசிய வீடியோ பதிவிற்கு சம்மந்தமில்லாமல் இருக்கிறது. அதில் கட்டாய மத மாற்றம் செய்வதற்காக மாணவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தைப்பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.மரணத்திற்கு முன் மாணவி கொடுத்த வீடியோ பதிவு மிகத் தெளிவாக சிஸ்டர் சகாயமேரி மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் மத மாற்றத்திற்கு
கட்டாயப்படுத்தியதை உறுதி செய்கிறது,

ஆகவே அரசு நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு
வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.