தனுஷ் தான் காரணம் … ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிய என்ன காரணம் தெரியுமா .?

0
Follow on Google News

இப்போது ஜெயம் ரவி ஆர்த்தி குடும்ப விவகாரம் இணையத்தில் பற்றி எரிந்து வருகிறது. மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஹீலரான பாடகி கெனிஷாவிடம் தஞ்சம் அடைந்து விட்டதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி விட்டார். வீட்டை விட்டு நான் வெளியேறிய அன்று முதல் ஆர்த்தி என் முன்னாள் மனைவிதான். என் வாழ்வின் ஒளி இனி கெனிஷா தான். அவரால் தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் ஜெயம் ரவி கெனிஷாவை ஆதரித்துள்ள பாடகி சுசித்ரா, ஆர்த்தி தனுஷ் நெருங்கிய நட்பு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பாடகி சுசித்ரா ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிகர் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்து மற்றும் சில முன்னணி நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசி புயலை கிளப்பியவர். குறிப்பாக அவர்களை பற்றிய அந்தரங்க விஷயங்களை பேசி விமர்சனங்களில் சிக்கியவர். இவர் பதிவு என்றாலே அதில் பூகம்பம் ஒளிந்திருக்கும் என்பது நிச்சயம்.

ஜெயம் ரவி ஆர்த்தி கெனிஷா விவகாரம் பூதாகாரமாக மாறிய இந்த சூழலில் நடிகர் தனுஷூம் ஆர்த்தியும் நாக்கை துருத்தியபடி நீட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பாடகி சுசித்ரா சில திடுக்கிடும் விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் ஆர்த்தியை ரொம்பவும் பாவம் என்பது போல பலரும் சித்தரிக்கின்றனர். அது உண்மையல்ல. இந்த விவகாரத்தில் உண்மையில் என் தோழி கெனிஷாதான் ரொம்பவும் பாவம் என தெரிவித்த சுசித்ரா.

ஜெயம் ரவிக்கு கெனிஷா மிகவும் ஆறுதலாக இருக்கிறார் என்பது உண்மைதான். யாருடைய ஆதரவுமின்றி நிர்கதியாக நின்ற ஜெயம் ரவிக்கு ஆறுதல் கொடுத்து அவரை குணப்படுத்தியதே ஹீலர் கெனிஷாதான். மன அழுத்தத்தால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி இருந்த ஜெயம் ரவியை அந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தவரும் கெனிஷாதான். தன் பிள்ளைகளை கூட பார்க்க அனுமதிக்காமல் பணக்கார அராஜகத்தை காட்டியவர்தான் ஆர்த்தி என தெரிவித்த சுசித்ரா..

மேலும் ஜெயம் ரவியை காதலிக்கும்போது நல்ல பெண்ணாக தன்னை காட்டிக்கொண்ட ஆர்த்தி, திருமணத்துக்கு பின் பல ஹீரோக்களை பார்த்ததும் அப்படியே மாறிவிட்டார். கெனிஷாவும் ஜெயம் ரவியும் மோசமானவர்கள் என இந்த சமுதாயத்துக்கு சித்தரித்து காட்டி விட்டு அவர் நடிகர் தனுஷை திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு தனுஷூடன் ஆர்த்தி அப்படி வாழவும் வாய்ப்பிருக்கிறது. இந்த விஷயத்தில் நான்தான் தனுஷையும் ஆர்த்தியையும் சேர்த்து வைத்தேன் என பெருமை பேச நடிகை குஷ்புவும் வந்துவிடுவார் என தெரிவித்த சுதித்ரா.

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் தனுஷூக்கும் ஆர்த்திக்கும் இடையே உள்ள ரிலேஷன்சிப் ஜெயம் ரவிக்கே தெரிய வந்தது. இந்த விஷயங்களை எல்லாம் ஜெயம் ரவி நிச்சயமாக கோர்ட்டில் வெளியிடுவார். சமீபத்தில் தனுஷூடன் நாக்கை நீட்டி துருத்திக்கொண்டு இருவரும் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை ஜெயம் ரவியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டவர் ஆர்த்தி என தெரிவித்த சுசித்ரா.

மேலும் இப்படி நாக்கை நீட்டி போட்டோ எடுத்துக்கொண்டால், இன்ஸ்டாகிராமில் ஒரு கோட் வார்த்தைகள் இருக்கிறது. எங்களுக்குள் மேட்டர் முடிந்து விட்டது. தொடர்ந்து எங்களுக்குள் மேட்டர் இருக்கும் என்பதுதான் அது. இந்த கோர்டு வார்த்தைகள் எல்லாம் ஜெயம் ரவிக்கு தெரியாது. இணையத்தில் இருந்த அந்த புகைப்படத்தை இப்போது ஆர்த்தியும் அவரது அம்மாவும் தேடி தேடி அழித்து விட்டனர். இப்போது அந்த புகைப்படம் இல்லை என தெரிவித்த சுசித்ரா.

மேலும் ஜெயம் ரவி நல்ல பையன். அவர் கோர்ட்டில் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லி விடுவார் என்பதால்தான் ஆர்த்தி, கோர்ட்டுக்கு வர பயப்படுகிறார் என்று பாடகி சுசித்ரா காரசாரமாக அந்த பதிவில் கூறியிருக்கிறார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய மாதிரி, ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரத்திலும் தனுஷ் பெயரை பாடகி சுசித்ரா இழுத்து விட்டிருப்பது மேலும் சூட்டை கிளப்பியிருக்கிறது. இதெல்லாம் நம்ப வேண்டுமா.? வேண்டாமா.? என்கிற அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here