பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், மொத்தம் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கிறது, அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வழங்கி இருந்தார்.
இந்நிலையில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கும் அதே திருச்சி மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்கும் பணி அதிரடியாக தொடங்க திட்டமிட்டு, அணைத்து சமூக மக்களின் ஆதரவில், தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி அவர்களை முன்னிறுத்தி தேவர் சிலை அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக தமிழகம் முளுவதும் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி ஆதரவை பெற்று வருகிறார் திருமாறன் ஜி. 150 அடியில் தேவர் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து உலகில் உள்ள அனைத்து தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது, இதனை தொடர்ந்து முதல் கட்டமாக அறக்கட்டளை அமைக்கும் பணியும், தேவர் சிலை அமைய இருக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி- சென்னை நான்கு வழி சாலை சமயபுரம் அருகில் சுமார் 8 இடங்கள் வரை கடந்த இரண்டு தினகளுக்கு முன் பார்வையிடப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் எந்த இடம் என விரைவில் ஆய்வு செய்யப்பட்ட பின் உறுதி செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கும் தேவர் சிலை வளாகத்தில், சுதந்திரத்துக்காக தென் இந்தியாவில் பாடுபட்ட அணைத்து தலைவர்களுக்கு 20 அடியில் சிலை அமைய இருக்கிறது.
மேலும் பொழுது போக்கு பூங்கா, நூலகம் போன்றவை அமைய இருக்கிறது. தற்போது பரிசீலனையில் உள்ள இடம் ஆய்வு பணிக்கு பின் முடிவு செய்ததும், அந்த இடத்தை தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி தலைவர் திருமாறன் ஜி வாங்கி அறக்கட்டளைக்கு அர்ப்பணிக்க இருக்கிறார். மேலும் இடம் தேர்வு செய்யப்பட்டு அறக்கட்டளை அமைந்ததும், உலக முளுவதும் உள்ள தமிழர்கள் நிதியளிக்க தயராக இருப்பது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் 135 அடியில் பெரியார் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பு வந்ததும், தங்கள் அதிருப்தியை எப்படி வெளிப்படுத்துவது என கடும் கோபத்தில் இருந்த ஆன்மீகவாதிகள் மற்றும் தேசியவாதிகள் தற்போது 150 அடியில் பசும்பொன் தேவர் சிலை அமைய இருப்பதை கொணடாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் நடக்கும் தேவர் சிலை அமைக்கும் பணியை பார்த்து திகைத்து போய் நிற்கின்றனர் பெரியாரிஸ்ட்கள்.