வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் போன்று களம் இறங்க இருக்கும் பாஜக கூட்டணியில் மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ் நாடு முழுவதும் உளவு துறை மூலம் நடந்த சர்வே ரிப்போர்ட் அமித்ஷா கைக்கு சென்றுள்ளது.
அதில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எது என்கிற லிஸ்டும் அமித்ஷா கைக்கு சென்றுள்ளது, குறிப்பாக தமிழகத்தில் தென்மாவட்டத்தில் பாஜகவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வாக்குகள் கிடைத்தது, அதிலும் தென்மாவட்ட தலைநகரான மதுரையில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது, மேலும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கட்சிகளான, அமமுக, தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சிகள் பாஜக உடன் கூட்டணியில் இருப்பது பாஜகவை தென் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த எம்ஜிஆர், ஜெயலலலிதா போன்று தன்னுடைய தேர்தல் வெற்றியை தென்மாவட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும் என முடிவு செய்த பாஜக தலைமை, மதுரை தெற்கு தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையை களம் இறக்க முடிவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த ஒரு டீம் மதுரை தெற்கு தொகுதியில் சர்வே ஒன்றை எடுத்துள்ளது.
அதில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உறுதி செய்ததது அந்த டீம். மேலும் மதுரை தெற்கு தொகுதியில் வாழைத்தோப்பு, முனிச்சாலை, மேல அனுப்பானடி, கீழ அனுப்பானடி, கீரைத்துறை, போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினரும்,
அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சௌராஷ்டிரா சமூகமுன் உள்ளது. இதில் தென் மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் பெருமைப்பாலும் பாஜக கூட்டணிக்கே சென்றது. அதே நேரத்தில் சௌராஷ்டிரா வாக்குகள் என்பது பெரும்பாலும் பாஜகவுக்கான வாக்குகள் என்பதில் மாற்றம் இல்லை.
அந்த வகையில், மதுரை தெற்கு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகம், அடுத்தாக இருக்கும் சௌராஷ்டிரா சமூகம் இந்த இரண்டுமே பாஜவுக்கான வாக்குகளாக மாறி வரும் நிலையில், அதுவும் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையே போட்டியிடும் போது எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்கிறது மதுரை தெற்கு தொகுதி களம் நிலவரம்.
மேலும் மதுரையில் உள்ள பத்து சட்டசபை தேர்தலில் TTV தினகரனின் அமமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்றும் , இதில் ஒரு தொகுதி TTV தினகரன் நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும், தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிடுவார் என்றும், மதுரை மத்திய தொகுதியில் பாஜக சார்பில் A R மகாலக்ஷ்மி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக சார்பில் சரத்குமார் போட்டியிடுவார் என்றும், மதுரை கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் போட்டியிடுவார் என்றும் கூறப்டுகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள பத்து தொகுதியில், அண்ணாமலை, TTV தினகரன், சரத்குமார் , திருமாறன் ஜி போன்ற பிரபலங்கள் நேரடியாக போட்டியிடுவதால் மதுரை 2026 தேர்தல் களம் விழாக் கோலம் பூண்ட இருக்கிறது.