விஜய் உடன் ரகசிய சந்திப்பு… அமித்ஷாவுக்கு ஆல்வா கொடுக்கும் எடப்பாடி… உளவு துறை மூலம் அமித்சாவுக்கு போன ரிப்போர்ட்…

0
Follow on Google News

எடப்பாடி பழனிச்சாமி திடீரென்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த பின்பு, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, இப்போது மட்டுமல்ல எப்போதுமே இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வாய் கிழிய பேசிவிட்டு தற்பொழுது அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி சரண்டர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி அமித்ஷாவிடம் சரண்டரான பிண்ணனி என்ன என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு சென்னை, கோவை என பலமுறை தமிழகம் வந்திருந்தார், அப்போதெல்லாம் அதிமுகவைச் சார்ந்த எஸ் பி வேலுமணி போன்ற தலைவர்கள் எல்லாம் அமித்சாவை சந்தித்தபோது, எடப்பாடி சந்திக்க வில்லை.

ஆனால் தீடிரென தற்பொழுது டெல்லியில் போய் சந்திக்க வேண்டிய பின்னணியில் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி எதற்காக தன்னை டெல்லியில் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்கிறார், ஏன் திடீரென்று இப்படி நம்மிடம் இறங்கி வருகிறார் என்கின்ற முழு தகவலும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வதற்கு முன்பே உளவுத்துறை மூலம் அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.

அதாவது அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜயை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன் என யாருமே இல்லை. விஜய் மற்றும் மிதுன் இவர்கள் இருவரும் மட்டுமே சந்தித்து அதிமுக – தமிழக வெற்றி கழக கூட்டணி குறித்து இருவரும் பேசி இருக்கிறார்கள்.

அப்போது அதிமுக கூட்டணிக்கு தமிழக வெற்றி கழக இணைவதை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் நேரடியாக விஜயிடம் கேட்டிருக்கிறார். மேலும் அதிமுகவும் தமிழக வெற்றிக்கழகமும் இணைந்து வரும் 2026 தேர்தலை சந்தித்தால், 2021 இல் எப்படி அதிமுகவும் விஜயகாந்த்தும் இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்க முடிந்ததோ,அதேபோன்று ஒரு நிலை வரும் என்று எடப்பாடி மகன் மிதுன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதற்கு நடிகர் விஜய் தற்பொழுது ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் முழுநேர அரசியலில் ஈடுபடுகிறேன். குறிப்பாக தமிழக முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த விஜய், அப்படி சுற்றுப்பயணம் முடிந்து தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஜனவரி அல்லது பிப்ரவரியில் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன், தற்பொழுது தன்னால் எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்க முடியாது என்று, எடப்பாடி மகனிடம் தெரிவித்திருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இனி விஜயை நம்பி பிரயோஜனம் இல்லை. மேலும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினால் திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் வந்துவிடுவார், கம்யூனிஸ்ட் வரும், காங்கிரஸ் வந்துவிடுவார் என்று ஏமாந்தது போதும், அதனால் நேரடியாக பாஜகவிடம் சரண்டர் ஆகி விடுவோம் என முடிவு செய்து அமித் ஷாவை சந்திக்க டெல்லியில் அனுமதி வாங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிச்சாமி மகன் விஜயை சந்தித்து காரியாகவில்லை, மேலும் வேறு எந்த கட்சியும் எடப்பாடியிடம் கூட்டணிக்கு வரவில்லை என்றதும் நம்மை தேடி வருகிறார் எடப்பாடி என்பதை நன்கு உணர்ந்து அமித்ஷா, எடப்பாடி உடன் சந்திப்புக்கு பின்பு இவரை முழுசா நம்ப முடியாது, தேர்தலுக்கு மும்பு விஜய் கூட்டணி வைக்கலாம் என்று சிக்னல் கொடுத்தால் அந்த பக்கம் எடப்பாடி ஓடி விடுவார் என தமிழக பாஜக தலைமைக்கு தகவல் அனுப்பி இருக்கிறார் அமித்சா என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here