கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது, பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தால், நம்முடன் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்கிற அரசியல் கணக்கை போட்டு பாஜக உடன் இனிமேல் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, இப்போது மட்டும் இல்லை எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என வாய் கிழிய பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் திமுக கூட்டணியில் இருந்த திருமா, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு வராமல் திமுக கூட்டணியிலே தொடர்ந்தது எடப்பாடிக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது, அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும் எடப்பாடிக்கு குட் பை சொல்லிவிட்டு பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றன.

தேர்தலுக்கு கடைசி வரை மெகா கூட்டணி அமைப்போம், என பேசி வந்த எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாலும், எந்த கட்சியும் வரவில்லை, ஒரு கட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்தைக்கு வந்து அவரும் கூட்டணி பேச்சுவார்த்தை உடன்படவில்லை என எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் கூட்டணி அமைக்க மறுத்து விட்டார்.
அந்த அளவுக்கு கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சந்தி சிரித்து வந்த நிலையில், STPI அதிமுக கூட்டணிக்கு வந்தது, இறுதியில் பாஜக கூட்டணிக்கு செல்ல இருந்த தேமுதிகவை ஒரு ராஜசபா சீட் தருகிறேன் என ஆசை காட்டி கூட்டணியில் இணைந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, தற்பொழுது ராஜசபா சீட் இல்லை என கைவிரித்து ஏமாற்றிய நிகழ்வும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் இருந்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஆதவ் அர்ஜுன் மூலம் நடத்தி வந்துள்ளார், ஆனால் எடப்பாடி உடன் கூட்டணிக்கு விஜய் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2026 தேர்தலுக்கு முன்பே அரசியலில் எடப்பாடி காணாமல் போய் விடுவார் என்கிற ஒரு சூழல் உருவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து அங்க சுத்தி , இங்க சுத்தி பாஜகவிடம் சரண்டராக தயாரானார் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி சென்று அங்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். பாஜக உடன் கூட்டணி வைத்து வரும் 2026 தேர்தலை சந்திக்க தயார் என விருப்பம் தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் அமித்ஷா தேர்தல் நெருங்கட்டும் அப்போது பார்த்து கொள்ளலாம் என அமித்ஷா பிடி கொடுக்காமல் எடப்பாடிக்கு பதில் கொடுத்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எடப்பாடி சந்திப்பு முடிந்த உடனே மத்திய அமைச்சர் அமித்சாவிடம் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒரு சந்தர்ப்பவாதி என்பதை , பலமுறை நிரூபித்து இருகிறார். தற்பொழுது அவருடன் கூட்டணிக்கு விஜய் வருவார் என எதிர்பார்த்து , விஜய் வரவில்லை என்றதும் பாஜக பக்கம் வந்துள்ளார்.
தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு விஜய் அதிமுக கூட்டணிக்கு வருகிறேன் என சிக்னல் கொடுத்தால்,எடப்பாடி விஜய் பக்கம் சென்று விடுவார், அதனால், தற்பொழுது இருக்கும் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் வேலை செய்து வாருங்கள். குறிப்பாக எடப்பாடி தலைமையிலான அதிமுகவை கூட்டணியில் இணைப்பதா.? வேண்டாமா.? என்பதை தேர்தல் நெருங்கும் போது பார்த்து கொள்வோம் என டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்சாவிடம் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பாஜக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.