பாஜக தலைவராக அண்ணாமலை வந்து பிறகு, தமிழகத்தில் பாஜகவின் அசூர வளர்ச்சி திமுகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதை விட எடப்பாடி பழனிசாமிக்கு மிக பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. திமுகவுக்கு மாற்று பாஜக தான் என பாஜகவின் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தமிழக மக்கள் மத்தியில் ஒரு தலைவனாக அண்ணாமலை உருவெடுத்து வந்தது எடப்பாடிக்கு மிக பெரிய உறுத்தலாக இருந்து வந்தது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த போது, தொடர்ந்து பாஜக வளர்ந்து விடாத அளவுக்கு மட்டம் தட்டி கொண்டே இருந்தார் எடப்பாடி பழனி சாமி, ஆனால் அண்ணாமலை தலைமையை ஏற்ற பின்பு எடப்பாடி பாச்சா பலிக்கவில்லை. இதனை தொடர்ந்து அண்ணாமலை பாஜக மாநில தலைவராக தொடர்ந்தால் தான் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை நோக்கி நகரும், இதை தடுக்க எடப்பாடி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒரு திட்டத்தை போடுகிறார்.

அதில் அண்ணாமலை அதிமுக உடன் இணக்கமாக போகவில்லை, பாஜக தலைவராக அண்ணாமலையை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமித்தால் பாஜக உடன் கூட்டணியில் தொடர்வோம் இல்லை என்றால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி விடுவோம் என டெல்லி பாஜக தலைமையிடம் எடப்பாடி தெரிவிக்கிறார். மேலும் எடப்பாடிக்கு ஆதரவாக பாஜகவில் இருக்கும் சில திராவிட ஏஜெண்டுகளும், ஐயோ… அதிமுக உடன் கூட்டணி இல்லை என்றால் தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்க முடியாது.
அதனால் அதிமுகவில் அனுசரணையாக இருக்க கூடிய எங்களை மாநில தலைவராக நியமிங்க என்று டெல்லிக்கு படையெடுத்து வந்தனர் ஒரு சில திராவிட ஏஜெண்டுகள்.ஆனால் டெல்லி பாஜக தலைமையோ அண்ணாமலை பாஜக தலைவராக தொடர்வார், அதிமுக கூட்டணியை விட்டு வெளியே செல்லட்டும், பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்பதில் டெல்லி தலைமை உறுதியாக இருந்தது.
இதனை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அறிவித்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு கடைசி நிமிடம் வரை, பாஜக தலைவராக அண்ணாமலைக்கு பதில் வேறு ஒருவரை கொண்டு வாங்க, உங்களுடன் கூட்டணிக்கு தயார் என டெல்லிக்கு தொடர்ந்து தூது அனுப்பி கொண்டிருந்தார், அதற்கு டெல்லி தலைமை செவி சாய்க்கவில்லை.
இதனை தொடர்ந்து பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து, நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி டெபாசிட் இழக்க வைத்து, பாஜகவை இரண்டாம் இடம் பிடிக்க வைத்து சாதித்து காட்டினார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் மேலும் தேமுதிக இணைந்து வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது பாஜக தலைமையிலான கூட்டணி.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக வரும் 2026 தேர்தல் வரை தாக்கு பிடிக்குமா என்கிற சந்தேகம் எழும் வகையில் அந்த கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அங்கே அமித்ஷாவை சந்தித்து பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
சில நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, அமித்சா அடிக்கடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரை குறிப்பிட்டு சில விஷயங்கள் தெரிவித்து இருக்கிறார். மேலும் சந்திப்பின் இறுதியில் தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து எனக்கு உளவு துறை ரிப்போர்ட் வந்துள்ளது. மேலும் கூட்டணி மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனக்கு வந்த ரிப்போர்ட் அடிப்படையில், அண்ணாமலையிடம் பேசிவிட்டு பின்பு முடிவு செய்யலாம் என அமித்சா சிருச்ச முகத்துடன் பேசி வழியனுப்ப, அண்ணாமலைக்கு அமித்சா கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து வாடிய முகத்துடன் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.