தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில், தொகுதிக்கு 10 பேர் என தமிழகம் முழுவதும் உள்ள சட்டசபை தொகுதிகளில், தற்போதை மக்கள் மனநிலை என்ன, வரும் சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என நமது தினசேவல் நியூஸ் குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்பொழுது இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆளும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை தமிழகம் முழுவதும் பார்க்க முடிந்தது, குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்த மக்கள், இம்முறை திமுகவுக்கு எதிராக வாக்களிக்க இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள், மேலும் அவர்களிடம் கடந்த முறை ஏன் திமுகவிற்கு வாக்களித்தீர்கள் என்று கருத்து கேட்ட போது, திமுகவுக்கு எதிராக வலுவான தலைவர்கள் யாரும் இல்லை, அதனால் வேறு வழியின்றி திமுகவுக்கு வாக்களித்தோம் என கருத்துக்களை பதிவு செய்தனர்.

தற்பொழுது திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்த மக்களிடம், அதாவது திமுக எதிர்ப்பு வாக்காளரிடம், நீங்கள் வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பீர்கள் என கருத்து கேட்ட போது, 22.5 சதவிகித மக்கள் தேர்தல் வரும் போது முடிவு செய்வோம் என தெரிவிதவர்கள், 4 சதவிகிதம் பேர் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு வாக்களிப்போம் என்றும், 3.5 சதவிகிதம் பேர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு வாக்களிப்போம் என்றும், எடப்பாடி தலைமையிலான எடப்பாடி பழனிசாமிக்கு 7 சதவிகிதம் பேர் வாக்களிப்போம் என்றும், அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணிக்கு சுமார் 55 சதவிகிதம் பெரும், மீதம் 8 சதவிகிதம் பேர் திமுக எதிரான கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரை பார்த்து வாக்களிப்போம் என்றும் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
இந்நிலையில் திமுகவுக்கு எதிராக வாக்காளர்கள் சுமார் 55 சதவிகிதம் பேர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்தவர்களிடம், பாஜகவில் அண்ணாமலை தவிர்த்து வேறு ஒருவரை முன்னிறுத்தி தேர்தலை பாஜக சந்தித்தால் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு, சுமை 51 சதவிகிதம் பேர் பாஜக அல்லாத கட்சிக்கு வாக்களிப்போம் என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் தற்பொழுது ஆளும் திமுக கூட்டணி வரும் 2026 சட்டசபை தேர்தலில் 101 தொகுதிகளில் வெற்றி பெரும் என்றும், எடப்பாடி தலைமையிலான அதிமுக வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் என்றும் , தமிழக வெற்றி கழகம் சார்பில் அதன் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியின் மட்டுமே அக்கட்சி வெற்றி பெரும், மற்ற எந்த தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் முடிவு செய்கிறது.
இதில் அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணி வரும் 2026 சட்டசபை தேர்தலில் 115 தொகுதிகளில் வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் உறுதி செய்கிறது. மேலும் சுமார் 8 தொகுதிகள் திமுக மற்றும் பாஜக இரண்டு கூட்டணிகளும் சமமான அளவில் இருப்பதை கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வருகிறது.
இந்நிலையில் தற்போதை சூழல் படி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது, அதே நேரத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக மற்றும் விஜய் தலைமையிலான விஜய் ஆகிய கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பதற்கு வாய்ப்பிலை என்பதால் 2026 சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதே நேரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.