சவால் விடுத்து சம்பவம் செய்த அண்ணாமலை.. செந்தில் பாலாஜி அடி மடியில் கை வைத்த அமலாக்கதுறை..

0
Follow on Google News

அமைச்சர் செந்தில் இதற்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டிய வாட்ச் பில் கேட்டு, பின்பு அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனைகள் நடைபெற்று சிறைக்கு சென்றார். செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை மேற்கொண்ட பின்பு திமுகவில் இருந்து யாருமே வாட்ச் பில் கேட்கவில்லை.

செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்ட பின்பு வேறு யாருக்கு வாட்ச் பில் வேண்டும் என பாஜகவினர் திமுகவினரை பார்த்து கிண்டல் செய்த சம்பவமும் அரங்கேறியது. இந்த நிலையில் மீண்டும் பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டி, தற்பொழுது மீண்டும் அமலாக்க துறை அதிரடியில் சிக்கி இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதில் உச்சக்கட்டம் என்னவென்றால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதெல்லாம் நடக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விடுத்து சம்பவம் செய்துள்ளார் அண்ணாமலை. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணாமலையை சீண்டும் வகையில், உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு.. நாடாமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என்று வந்தார்கள்.. தம்பி.. இந்த ஊரும் பெரியார் மண்தான்.. உனக்கு அங்கேயும் வேலையில்ல.. இங்கேயும் வேலையில்ல..

தமிழ்நாட்டில் இனி எங்கேயும் வேலையில்லை என பேசிய செந்தில் பாலாஜி, உலகத்திலேயே நான்தான் அறிவாளி என்று நினைத்து கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு.. ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டார். சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல், செருப்பு போட மாட்டேன் என்று புது கதையை சொன்னார்.இனி வாழ்நாள் முழுக்க உன்னால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என அண்ணாமலையை சீண்டும் வகையில் பேசி இருந்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழல் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கும் என அண்ணாமலை சவால் விடுத்து இருந்தார். அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துக்களை அமலாக்க துறை முடக்கி இருந்தது. அந்த வகையில் டாஸ்மாக் துறையை கையில் வைத்திருக்கும் செந்தில்பாலாஜிக்கு எதோ ஒரு வகையில் சிக்கல் வர போகிறது என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனை நடந்து வருகின்றது. இதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் நபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்களான கொங்கு மெஸ் சுப்பிரமணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ் சங்கர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை வாட்ச் பில் கேட்டு பின்பு நடந்த அமலாக்கதுறை அதிரடியில் சுமார் ஒன்றரை வருடம் சிறையில் இருந்து போராடி ஜாமின் பெற்று திரும்பினார் செந்தில்பாலாஜி, அணல் தற்பொழுது அண்ணாமலை விலை போகாத ஆடு என்று செந்தில் பாலாஜி பேசிய ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்பொழுது அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாட்ச் பில் கேட்டு 2024 நடாளுமன்ற தேர்தலின் போது சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, தற்போது விலை போகாத ஆடு என பேசி வரும் 2026 சட்டசபை தேர்தலின் போது சிறை செல்ல தயாராகிவிட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here