அண்ணாமலை செயல்பாடு.. தூக்கமின்றி தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..!

0
Follow on Google News

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற மிக குறுகிய காலத்தில் அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர். அடுத்து சசிகலா முதல்வராக பதவியேற்கும் ஏற்பாடுகளை மிக விறுவிறுப்பாக செய்து வந்தனர். இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க கட்சி இரண்டாக பிரிந்தது.

மேலும் பதவி ஏற்பதற்கு முன்பு சசிகலா சிறை செல்லவும் நேரிட்டது. இதனால் தான் சிறைக்கு போவதை அறிந்த சசிகலா முன்கூட்டியே தனக்கு நம்பிக்கை கூறியவரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தி விட்டு சென்றார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆன பின்பு அந்தப் பதவியை மீண்டும் விட்டு தர மனமில்லாமல் சசிகலாவை அதிமுகவிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளை கச்சிதமாக செய்து முடித்தார்.

மேலும் தன்னுடைய முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள ஓ பன்னீர்செல்வத்தை உடன் கைகோர்த்தார் எடப்பாடி. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய ஆட்சியை இழந்துள்ளது. ஓபிஎஸ்ஸை கட்டம் கட்டி வந்த எடப்பாடி கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுகவை முழுவதும் தன்னுடைய ஒருவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதர்க்கு திட்டமிட்டார் எடப்பாடி.

திமுகவிற்கு மாற்றாக இனி நான் தான் என தன்னை முன்னிறுத்தி வந்தார் எடப்பாடி. அவர் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்பு மிக குறுகிய காலத்தில் அண்ணாமலையின் வளர்ச்சி திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்கின்ற ஒரு அரசியல் களமாக தமிழகம் மாறியது. மேலும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் மறந்து விட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒரு அறிவிக்கப்படாத எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை தொலைக்காட்சி பேட்டிகள், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் இது அனைத்துமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, நாளுக்கு நாள் அண்ணாமலையின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இனி வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கக் கூடிய ஒரு தலைவர் அண்ணாமலை தான் என்கின்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் உலாவி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடிதான் என்னையும் வண்டியில ஏத்துங்க என்று போலீசாரிடம் பிடிவாதம் பிடித்து, நான் ஜெயிலுக்குப் போகிறேன், ஜெயிலுக்குப் போகிறேன் என்று டாட்டா காண்பித்து விட்டு செல்வார். அதுபோன்று எடப்பாடி பழனிச்சாமியும் நான் தான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், நாங்கள் தான் திமுகவை எதிர்க்கக் கூடியவர்கள் என்று தற்பொழுது ஒரு புறம் கத்திக் கொண்டிருந்தாலும் தமிழக மக்கள் பெரும்பாலும் அவரை கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய கட்சி நிர்வாகிகள், மற்றும் ஐடி பிரிவு நிர்வாகிகளை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி. தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் பேச்சு மக்கள் மத்தியில் மிக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவருடைய பேசும் ஒவ்வொரு வீடியோக்களும் மக்கள் மத்தியில் எளிதாக சென்று விடுகிறது.

ஆகையால் இனிவரும் பொதுக்கூட்டங்களில் நான் பேசும் வீடியோக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உங்களுடைய பொறுப்பு என எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிமுக ஐடி பிரிவினர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இருந்தும் வரவேற்பு இல்லாததால், திமுகவுக்கு எதிராக அண்ணாமலையின் தீவிர செயல்பாடுகளால் தூக்கம் இன்றி தவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என கூறப்படுவது குறிப்பிடதக்கது.

அண்ணாமலை செயல்பாடு.. தூக்கமின்றி தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..!