தென் மாநிலங்களில் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்..தென் மாநிலக்களில் மட்டுமே பாஜகவுக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைக்குமா.?

0
Follow on Google News

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்டமாக இதுவரை 283 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது, முதல் கட்டமாக நடைபெற்ற வாக்கு பதிவில் தமிழகம் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக தனித்து மூன்று தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகள் 3 தொகுதிகள் வெற்றி பெறும் என எதிர்பார்க்க படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஆறு தொகுதிகளை பாஜக கூட்டணிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்பொழுது பாண்டிச்சேரி தமிழ்நாடு உட்பட 40 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாடு பாண்டிச்சேரியில் இந்த முறை 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத பாஜக, இம்முறை அங்கே உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் பாஜக குறைந்தது வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆந்திராவில் தற்பொழுது ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி பாஜவுக்கான ஆதரவு அலையாக உருவாகியுள்ளது.

அதாவது கடந்த தேர்தல் வாக்குறுதிகளை ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றவில்லை என்கிற அதிருப்தி ஆந்திர மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அந்த வகையில் நடக்க இருக்கும் தேர்தலில் ஆந்திராவில் உள்ள மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் குறைந்தது மூன்று தொகுதிகளில் இருந்து 4 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று தெலுங்கானாவில் 17 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏழு தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தென் இந்தியாவில் கர்நாடகாவில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளை விட இம்முறை 5 தொகுதிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் 5 தொகுதி குறைவாக பெற்றாலும் கூட,

தென் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கடந்த முறை பாஜக பெற்ற வெற்றியை விட இந்த முறை அதிக வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு ,புதுசேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

ஆனால் இம்முறை தமிழ்நாடு, புதுசேரி ஆகிய மாநிலங்களில் 6 தொகுதிகளும் கேரளாவில் குறைந்தது 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெரும் என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் கடந்த முறை பாஜக வாங்கிய தொகுதியை விட இம்முறை ஐந்து தொகுதிகளை பாஜக இழந்தாலும் பிற தென் மாநிலங்களில் பெரும் வெற்றி , கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றியை விட அதிகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில் கர்நாடகாவில் பாஜக கடந்த முறையை விட இம்முறை 5 தொகுதி குறைவாக வெற்றி பெற்றாலும் அது பாஜகவுக்கு எந்த ஒரு பாதிப்பையும் தென் மாநிலங்களில் ஏற்படுத்தாது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.