நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்து அமித்ஷா செய்த சம்பவம், முக்குடைபட்டது போன்று கனிமொழிக்கு நிகழ்ந்துள்ளது. மேலும் கனிமொழிக்கு ஆதரவாக திமுக எம்பி கலாநிதி மாறன் எழுந்து பேச, அதற்கு அமித்ஷா கொடுத்த பதிலடியால் ,நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு உச்சக்கட்ட அவமானத்தை பெற்று தந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்த போது, திமுக எம்பி கனிமொழி குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும் என பேசியவர், மேலும் இலங்கை தமிழ் அகதிகளை நீண்ட கால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். என்றும்,

20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கு பிறந்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்த கனிமொழி. குறிப்பாக இலங்கை தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என கனிமொழி பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பதில் அளித்தார்.
அப்போது இலங்கை அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனது இதயமும் வலிக்கிறது என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேலும் அகதிகளுக்கான எங்கள் கொள்கை என்ன? என்று கனிமொழி கேட்டார். நான் அதை பற்றி விளக்கம் அளிக்கிறேன் என விளக்கம் கொடுத்த அமித்ஷா.
இலங்கை அகதிகளுக்கான 1986-ம் ஆண்டின் இந்திய அரசாங்கத்தின் கொள்கை அப்படியேத்தான் இப்போதும் உள்ளது. திமுக 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் இருந்தபோது இருந்த அதே கொள்கை அப்படியே தற்பொழுதும் இருந்திருக்கிறது என தெரிவித்த அமித்ஷா, மேலும் காங்கிரஸ் ஆட்சியில், 10 ஆண்டுகளாக தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தார், டி.ஆர்.பாலுவும் ஒரு அமைச்சராக இருந்தார். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை.
இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களா? அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என கனிமொழிக்கு மட்டுமில்லை அங்கே அவையில் இருந்த ஒட்டுமொத்த திமுக எம்பிகளுக்கும் பதிலடி கொடுத்த அமித்ஷா. மேலும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான நீங்கள் வகுத்த கொள்கையில் நாங்கள் ஒரு ‘கமா’வைக் கூட மாற்றவில்லை.
தி.மு.க. அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட அதே கொள்கையை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.. நீங்கள் ஏதேனும் மாற்றங்களை விரும்பினால், அவற்றை என்னிடம் கொடுங்கள். அதை நாங்கள் பரிசீலிப்போம் என அமித்ஷா விளக்கம் கொடுத்த கொண்டிருந்த போது, வடசென்னை தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராசாமி குறுக்கிட்டு,
நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று அமித்ஷாவை பார்த்து கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, இதுவரை, தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 4 முறை என்னை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரு முறை கூட அவர்கள் இலங்கை தமிழ் அகதிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என தெரிவித்த அமித்ஷா, ஆனால் இப்போது ”ஏதாவது செய்யுங்கள், ஏதாவது செய்யுங்கள்” என்று கூறுகிறார்கள்.
நீங்கள் இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சினையை ஒருபோதும் எழுப்பவில்லை, அதனால் நீங்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, நீங்கள் கொண்டு வந்த உங்கள் கொள்கை நல்லதாகத்தான் இருக்கும் என்று கருதி, நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம். என தெரிவித்த அமித்சா, மேலும் இப்போதும் கூட, நீங்கள் ஏதாவது பரிந்துரைத்தால், நாங்கள் அதைப் பரிசீலிப்போம் என பதில் அளித்து ஒட்டு மொத்த திமுக எம்பிகளின் வாயை அடைத்தது, நாடளுமன்றத்தில் திமுகவிற்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானமாக அமைந்து இருந்தது.