சமீபத்தில் திமுக அமைச்சராக இருந்த பொன்முடி – செந்தில் பாலாஜி இருவரும் தங்களுடைய அமைச்சர் பதவியில் ராஜினாமா செய்தனர், குறிப்பாக இது வழக்கத்துக்கு மாறாக நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி மற்றும் மக்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பின் காரணமாக இருவரின் ராஜினாமா அரங்கேறியது. இது முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக திமுக அமைச்சர்கள் குற்றச்சாட்டின் பெயரில் பதவி விலகியுள்ளதால் மக்கள் மத்தியிலும் திமுகவின் செல்வாக்கு சரிந்து இருக்கிறது. இந்த நிலையில் இதே போன்று அடுத்தடுத்து அமைச்சர் துரைமுருகன், ஐ பெரியசாமி ஆகியோர் விக்கெட்களும் வில இருக்கிறது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா பேசி இருப்பதை எதார்த்தமாக கடந்து செல்ல முடியாது.

அதில் ஏதோ ஒரு உள் அர்த்தம் இருப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது, அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இந்த வருடம் 2025 தொடங்கியதுமே திமுகவை டார்கெட் செய்து அரசியல் நகர்வுகளை நகர்த்தத் தொடங்கிவிட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள். திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகன் மற்றும் வேளாண் துறை அமைச்சரான எம் ஆர் கே பன்னீர்செல்வம் இவர்களின் சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த வகையில் தேர்தலுக்குள் இந்த இரண்டு அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்கை விரைந்து நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் திமுகவின் மற்றொரு மூத்த அமைச்சரான கே என் நேரு மற்றும் அவருடைய சகோதரர் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.
இது தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அமலாக்கத்துறை பிடியில் கேஎன் நேருவும் சிக்கி இருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரங்கள். மற்றொரு மூத்த அமைச்சரான ஐ பெரியசாமி கடந்த 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் சுமார் 2 கோடிக்கு மேல் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012 காலகட்டத்தில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு வழக்கை விசாரணை நடத்திய திண்டுக்கல் நீதிமன்றம் ஐ பெரியசாமியை விடுவித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை இந்த வழக்கை மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் மூத்த அமைச்சரான ஐ பெரியசாமி அவருடைய மனைவி இரண்டு மகள் மகன்கள் ஆகியோர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்தது ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கி, மேலும் இந்த வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில் அனைத்து அமைச்சர்களும் பழைய வழக்குகள் தூசி தட்டி தற்பொழுது விரைந்து முடிக்க நீதிமன்றம் பரபரப்பான உத்தரவுகளை தெரிவித்து வருவது திமுக ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது. ஊழல் ஆட்சி என்கின்ற விவாதமும் நடந்து வருகிறது.
அந்த வகையில் திமுக அமைச்சர்க்ளை ஒரு பக்கம் நீதிமன்றம் இறுக்கி பிடித்துக் கொண்டு இருக்கும் வேளையில, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் திமுகவை மக்கள் மத்தியில் டேமேஜ் செய்யும் வகையில் திமுக ஊழல் கட்சி என்று வரும் 2026 தேர்தலில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல், மேலும் மத்திய உள்துறை அமைச்சர் திமுக அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுகள் சிக்க வைப்பதன் மூலம் அவர்களை தேர்தலில் சுதந்திரமாக வேலை செய்ய விடாமல் முடக்கும் நிலைக்கு கொண்டு வருவது தான் திட்டம் என்று கூறப்படுகிறது.