மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய சகாக்கள் டெல்லி சென்று இருந்தார்கள். டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடுவதற்காக தான் டெல்லி செல்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி பூசி முழுகினாலும், அமித்ஷாவை ரகசியமாக சந்திக்க சென்றது வெளிப்பட்டு விட்டது.
இந்த நிலையில் அமிர்தாவை சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய சகாக்கள்கள் அதே வீட்டில் உள்ள ஒரு அறையில் காக்க வைக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார், அதனால் அந்த மீட்டிங்கை முடித்துவிட்டு உங்களை அழைப்பார் அதுவரை காத்திருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் 45 நிமிடம் அதே அறையில் காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய சகாக்களிடம், தற்பொழுது மத்திய அமைச்சர் அமித்ஷா ஃப்ரீயாக இருக்கிறார், உங்களை அழைக்கிறார் வாருங்கள் என்று அழைப்பு வந்திருக்கிறது. உடனே அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி அண்ட் கோ அங்கே பல விவரங்களை பேசியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமியிடம் மிகவும் ஜாலியாக எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்த அமித்ஷ.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும், சசிகலாவைஅதிமுகவில் இணைக்க வேண்டும், டிடிவியை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்றெல்லாம் நான் சொன்னேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை இப்ப என்ன ஆச்சு பார்த்தீங்களா.? என்று சற்று கறார் முகத்துடனே எடப்பாடியிடம் பேசி இருக்கிறார் அமித்ஷா.
அது மட்டும் அல்லாமல் நீங்கள் எங்களுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்தித்தீர்கள் என்ன சாதித்து விட்டீர்கள், கடந்த 2021 தேர்தலோட ஒப்பிடும்போது 2024 தேர்தலில் படு மோசமான தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறீர்கள் என்று எடப்பாடியை நேருக்கு நேராக வைத்துவிட்டு செம்ம டோஸ் விட்ட அமித்ஷா, இது போன்ற ஒரு நிகழ்வு 2026லிம் நடக்கக்கூடாது.
ஆகையால் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள், 2026 இல் திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும், அதனால் தற்பொழுது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு தேமுதிகவும் இணைய தயாராகிவிட்டது. நீங்கள் மட்டும் தான் தனித்து உள்ளீர்கள் தனித்து உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்ட அமித்ஷா.
அதனால் தான் நான் கடந்த முறை ஈசா வந்தபோது திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என வேலுமணி ஜி யிடம் சொன்னேன், அதற்கு அவர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு தயார் என்று என்னிடம் மணி ஜி தெரிவித்தார், நான் இந்த மாத இறுதிக்குள் உங்கள் முடிவை சொல்லுங்கள் என்றேன் என அமித்ஷா பேசி கொண்டிருக்கையில், எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் டிடிவி சசிகலா ஆகியோர் கூட்டணியில் இடம்பெறக்கூடாது, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, மேலும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி குறுக்கே பேச.
உடனே டென்ஷனான அமித்ஷா தற்பொழுது உங்களின் செல்வாக்கு தமிழ்நாட்டில் என்ன என்பது உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் எனக்கு வந்து விட்டது, நீங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் எங்களுக்கு எந்த ஒரு இழப்பும் கிடையாது, அதே நேரத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரையும் மட்டுமில்லை எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியையும் நாங்கள் வெளியேற்ற மாட்டோம் என்று கராராக சொன்ன அமித்ஷா.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை தான் முதல்வர் வேட்பாளர், தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் இந்த கூட்டணிக்கு பெயர், அந்த கூட்டணியை பாஜக தலைமை ஏற்றும் வழிநடத்தும் என்று திட்டவட்டமாக தெரிவித்த அமித்ஷா. எங்களுடன் டிடிவி தினகரன் கூட்டணியில் இருப்பார். அதிமுகவில் நீங்கள் மீண்டும் ஓபிஎஸ்யும் சசிகலாவையும் இணைத்தால் மட்டுமே அந்தக் கூட்டணி முழுமையான கூட்டணியாகும் அதனால் ஓபிஎஸ்யும் சசிகலாவையும் உங்கள் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு வழி செய்யுங்கள் என்று பேசி எடப்பாடியை அனுப்பிவிட்டாராம் அமித்ஷா.