வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், மற்ற காட்சிகளை விட பாஜக மிக தீவிரமாக வேலை செய்ய தொடங்கியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, பாஜக எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பது முக்கியமில்லை, நாம் எத்தனை தொகுதியில் வெற்றி பெற போகிறாம் என்பது தான் முக்கியம் என தமிழக பாஜக தலைமைக்கு வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மொத்தம் 50 தொகுதிகளை பெற்று அதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவை நேரடியாக அதிமுக டீல் செய்யட்டும் மற்ற கட்சிகளுக்கு இந்த 50 தொகுதிகளில் இருந்து பிரித்து கொடுக்க பாஜக டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்களே இருக்கும் நிலையில் முதல் கட்டமாக 20 வேட்பாளர்கள் பாஜக தலைமையின் உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 20 வேட்பாளர்கள் யார்.? எந்தந்த தொகுதி என்கிற தகவலும் வெளியாகியுள்ளது, அதில் 1. திருநெல்வேலி தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 2 நாங்குநேரி தொகுதியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன், 3. விளவங்கோடு தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி . 4 தி நகர் தொகுதியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம்.
5. வேளச்சேரி தொகுதியில் தொகுதியில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா, 6. மதுரை தெற்கு தொகுதியில் பாஜக முன்னாள் மதுரை மாவட்ட தலைவர் KK சீனிவாசன் , அல்லது AR மஹாலக்ஷ்மி ஆகிய இருவரில் ஒருவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமூகம் அடுத்து சௌராஷ்டிரா சமூக உள்ளது.
அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்த்தவர்களான KK சீனிவாசன் அல்லது AR மகாலக்ஷ்மி இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 7. மதுரை வடக்கு தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மதுரை பாராளுமன்ற தொகுதியில் திருமாறன் ஜி போட்டியிட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பெருந்தன்மையாக அந்த தொகுதியை விட்டு கொடுத்த திருமாறன் ஜிக்கு பாஜக வரும் 2026 சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்கும் என உறுதி படுத்துகிறது பாஜக வட்டாரங்கள்.
8. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் , 9. கிணத்து கடவு வசந்த ராஜன் ஆகியோர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 10. KV குப்பம் தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியானி, 11. திருப்பூர் தெற்கு தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் AP முருகானந்தம் , 12 ராசிபுரம் தொகுதியில் பாஜக துணை தலைவர் VP துரை சாமி ஆகியோர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
13. பேராவூரணி தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் , 14 தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடிகர் சரத்குமார், 15.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்த் ஐயா சாமி. 16. நெய்வேலி தொகுதியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், 17. பரமக்குடி தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி.
18. வேலூர் தொகுதியில் AC சண்முகம் , 19 ஈரோடு கிழக்கு அல்லது முடக்குறிச்சி ஆகிய இரன்டு தொகுதியில் ஒரு தொகுதியில் GK நாகராஜ் 20. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் VV செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டத்தில் எதாவது ஒரு தொகுதியில் களம் இறங்குவர் என்கிறது பாஜக வட்டாரங்கள்.