ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு கொள்ளை புறமாக பாஜக ஆட்சி செய்ய திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தாலும்ம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல அணிகளாக பிளவு பட்டிருந்த அதிமுகவை மீண்டும் இணைத்து ஒன்றிணைந்த அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு அணிகளும் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பாஜக டெல்லி தலைமை.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கமான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. ஓபிஎஸை அதிமுகவில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட்டு, ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்ட தொடங்கினார், இதனால் மீண்டும் அதிமுக இரண்டாக பிளந்தது.
ஒன்றுபட்ட அதிமுகவாக தான் இருக்க வேண்டும் என்கிற பாஜக டெல்லி தலைமையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி மீது பாஜக தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஓபிஎஸ் மீது கருணையும் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்துள்ளார், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை, இருந்ததில் முக்கிய தொழில் அதிபர் ஒருவர் உதவியுடன் அமித்ஷாவை சந்தித்துள்ளார் எடப்பாடி.
அப்போது மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவாக இணைவதற்கு முயற்சி செய்யுங்கள் என எடப்பாடியை அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளார் அமித்ஷா. இந்த நிலையில் சமீபத்தில் மதுரை வந்த பிரதமர் மோடியை எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையில் தனியாக சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் ஓபிஎஸ் அருகில் வரிசையில் எடப்பாடியை நிற்க வைத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் ஒரே அந்தஸ்து தான் என சுட்டி காட்டியது பாஜக தரப்பு.
பிரதமர் மோடி தமிழகம் வந்த அடுத்த இரண்டு நாட்களில் அமித்ஷா சென்னை வந்தார், அப்போது அமித்ஷாவை நேரில் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டபோது, அதற்கு அமித்ஷா தரப்பில் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் ஏற்கனவே டெல்லியில் சந்தித்த போதே ஓபிஎஸ் உடன் இணைவது குறித்து அமித்ஷா அட்வைஸ் செய்ததை எடப்பாடி ஏற்று கொள்ளாதது தான் மீண்டும் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அமித்ஷா தரப்பில் இருந்து முதலில் ஓபிஎஸ் உடன் மீண்டும் இணைவதற்கான வேலையை பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை ஓபிஎஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை புறக்கணிப்பதை உச்சகட்ட அவமானமாக கருதிய எடப்பாடி பழனிச்சாமி, இதன் பின்பு தான், அதிமுக ஐடி விங் மூலமாக பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்ய கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.