அதிமுகவில் எடப்பாடிக்கு எதிரான உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி எதிராக சுமார் 8 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளதாகவும், அதே நேரத்தில் அந்த 8 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பாஜக உடன் மிக நெருக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை ஏற்கனவே பாஜக டெல்லி தலைமைக்கு தெரிவித்து இருந்தனர்.
ஆனால் டெல்லி பாஜக தலைமை சில கண்டிசன்களை விதித்து இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அவருடைய கருத்தில் உறுதியாக இருக்க, நீ என்ன சொல்கிறது பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என, உன்னையவே அதிமுகவில் இருந்து வெளியே அனுப்புகிறோம் என முடிவு செய்த எடப்பாடிக்கு எதிராக இருக்கும் அதிமுகவின் 8 முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையனை முன்னிறுத்தி எடப்பாடியை எதிர்க்க தொடங்கினர்.

இப்படி அதிமுகவின் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் நடந்து கொண்டிருக்க கடந்த மாதம் தமிழகம் கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் SP வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் சந்தித்தனர், அப்போது, மார்ச் இறுதி வரை தான் டைம், அதற்க்குள் உங்கள் முடிவு என்ன என்பதை எனக்கு சொல்லுங்கள் என அமித்ஷா தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி க்கு எதிராக இருக்கும் அதிமுக தலைவர்கள், மார்ச் இறுதிக்குள் அமித்ஷாவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், பாஜக கூட்டணிக்கு செல்வது தான் சரியான முடிவு என எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சந்திப்பு எடப்பாடி யின் சில கோரிக்கைகள், மற்றும் அமித்சா விடுத்த கண்டிஷனுக்கு எடப்பாடி ஓகே சொல்லாததால், சந்திப்பு சுமுகமாக முடியவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதனை தொடர்ந்து எடப்பாடி க்கு எதிராக இருக்கும் அதிமுவின் 8 முன்னாள் அமைச்சர்கள், நாங்கள் என்ன செய்யவேண்டும் என அமித்ஷா தரப்புக்கு தகவல் அனுப்பியுள்ளார்கள், அதில் மேலும் பாஜகவில் இணைய கூட தயாராக இருக்கிறோம்.
நாங்கள் வெளியேறி விட்டால் எடப்பாடி ஆட்டம் குளோஸ், அதே நேரத்தில் 2026ல் வெற்றி பெற்றால் பாஜக ஆட்சியில் எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்கிற கோரிக்கையும் அமித்ஷா தரப்புக்கு விடுத்துள்ளார்கள். இந்த நிலையில் திடீரென டெல்லி பாஜக தலைமை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சென்னை, அல்லது கோவையில் இருந்து டெல்லி சென்றால் மீடியாவுக்கு தெரிந்து விடும் என, ரகசியமாக மதுரையில் இருந்து டெல்லி சென்ற செங்கோட்டையன் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு வருகிறார். இந்தநிலையில், பாஜகவில் இணைய தயாராக இருக்கும் 8 அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் நீங்கள் பாஜகவில் இணைவதை விட அதிமுகவில் இருந்து எடப்பாடியை வெளியேற்றி விட்டு, செங்கோட்டையன் தலைமையில், சசிகலா,ஓபிஎஸ் ஆகியோரை இணைந்து கூட்டணிக்கு வாருங்கள், அதற்காக உதவியை பாஜக செய்யும் என டெல்லி தலைமை வலியுறித்தியாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.