திமுகவில் இணைகிறார் ஜெயக்குமார்… எடப்பாடி உடன் உச்சகட்ட மோதல்…

0
Follow on Google News

சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்பு தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பாஜக உடன் மீண்டும் கூட்டணிக்கு தயார் என்கிற செய்தியை அமித்ஷாவிடம் தெரிவிக்க தான் எடப்பாடி அண்ட் கோ டெல்லி சென்றதாக கூறப்படும் நிலையில், அமித்சா தரப்பில் பல நிபந்தனைகளை விதித்து இதற்கெல்லாம் ஒத்து கொண்டால் மட்டுமே கூட்டணி என கறாராக எடப்பாடி யிடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக உடன் பாஜக கூட்டணி என்பது இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என இறங்கி வருவதற்கு, அதிமுகவின் முன்னணி தலைவர்களின் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்பு, பாஜகவுக்கு எதிராக கூவியவர்களில் எடப்பாடிக்கு அடுத்து ஜெயக்குமார் தான், மற்ற அதிமுக தலைவர்கள் பெருபாலும் பாஜக கூட்டணியில் தொடர்வதையே விரும்பினார்கள், ஆனால் எடப்பாடி பழனிசாமி , ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகிய மூவர் தான் பாஜக கூட்டணி வேண்டாம் என்று முறிந்து கொண்டு வெளியேறியவர்கள்.

மேலும் அப்போது, ஜெயக்குமார் பாஜக கூட்டணியில் தொடர்வோம் என எடப்பாடியிடம் தெரிவித்து உறுதியாக இருந்திருந்தால், அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து இருக்கும், ஆனால் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு அதிமுக வெளியே வந்த பின்பு, நான் ராயப்புரத்தில் தோற்க பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததே காரணம்” என பேசிய ஜெயக்குமார்.

மேலும் பாரதிய ஜனதா உடன் கூட்டணி வைத்ததால்தான் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தோற்றோம். ராயப்புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நான் முடிசூடா மன்னனாக திகழ்ந்தேன். பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன்.அது ஒரு ஓடாத சைக்கிள், பைக். அ.தி.மு.க.வின் தோல்விக்கு பாரதிய ஜனதா தான் காரணம் என தெரிவித்து விட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜெயக்குமார் மகன் தென் சென்னை தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது தனி கதை.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு முன்பு டெல்லிக்கு ஜெய்குமாரையும் உடன் அழைத்து இருக்கிறார். ஆனால் அதற்கு ஜெயக்குமார், பாஜக உடன் இனி கூட்டணியே இல்லை என்று சொன்னோம், இப்போது மீண்டும் அமித்சாவை சந்திக்க சென்றால் என்ன அர்த்தம், எனக்கு பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் விருப்பம் இல்லை, நான் டெல்லிக்கு வரவில்லை என ஜெயக்குமார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பாஜக பக்கம் செல்ல இருப்பதால் கடும் அதிருப்தியில் இருந்து வரும் ஜெயக்குமார் திமுகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, வரும் 2026 சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட சீட், மேலும் அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவில் இணைய தயார் என ஜெயக்குமார் திமுக விடம் பேசி வருவதாகவும்.

ஆனால் திமுக தரப்பில் ராயபுரம் தொகுதி தர தயார், அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி யோசிக்கலாம் என்று தெரிவித்து விட்டார்களாம், இருந்தாலும் ராயபுரம் தொகுதியில் திமுகவில் சீட் கிடைத்தால் கூட போதும் திமுகவில் இணைந்து விடுவோம் என்கிற மனநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here