திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மிக பெரிய சிம்ம சொப்பனமாக தமிழக அரசியலில் இருந்து வருகிறார் அண்ணாமலை. சுமார் 10 வருடம் ஆட்சியில் இல்லாமல், 2021ல் ஆட்சியை பிடித்த திமுக, அதற்கு முன்பு 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாததால் சம்பாரிக்க முடியாமல் போனதை சேர்ந்து எல்லா வழிகளிலும் திமுகவினர் சம்பாரித்து வருகிறார்கள். இதில் குறிப்பாக திமுகவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார் அண்ணாமலை.
அதாவது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியே சும்மா இருந்து வரும் நிலையில், திமுகவுக்கு எதிரான அண்ணாமலை அரசியல், ஒட்டு மொத்த திமுகவினருக்கு மிக பெரிய குடைச்சலாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் திமுகவை கடுமையாக எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்து வருவது திமுகவுக்கு மாற்று பாஜக தலைவர் அண்ணாமலை தான் என, தமிழக மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார் அண்ணாமலை.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி என்ன குட்டி காரணம் போட்டாலும் தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை நீ சசிகலா காலில் தவழ்ந்து சென்று பதவி வாங்கியவர் தானே, என ஒரு தலைவராக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொள்ள வில்லை. இதனால் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம கோபம். குறிப்பாக அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து காலி செய்துவிட்டால், அண்ணாமலை பேசும் பொருளாக இருக்க மாட்டார், அடுத்து திமுகவுக்கு மாற்றும் நாம் தான் என மக்கள் ஏற்று கொண்டு விடுவார்கள் என்கிற அரசியல் கணக்கை போட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு , நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து அவர்களுக்கு உடனே தண்டனை வாங்கி தருவோம் என பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை. குறிப்பாக கொட நாடு கொலை வழக்கை திமுக தீவிரப்படுத்தவும் இல்லை.
இதற்கு காரணம், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, நாங்கள் கொள்ளை அடிப்பதை எதிர்கட்சியான அதிமுக கண்டு கொள்ள கூடாது, அதே போல் கடந்த 10 வருடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை அடித்த கொள்ளை பற்றி நாங்கள் எதுவும் நோண்ட மாட்டோம் என எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவுக்கு இடையில் போடப்பட்ட திரைமறைவு ஓப்பந்தம் தான் என கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் இருவரின் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி போனது போன்று, திமுகவினர் குறித்து தொடர்ந்து ஊழல் குற்றசாட்டுகளை மக்கள் மத்தியில் ஒரு பக்கம் அண்ணாமலை அம்பலப்படுத்தி திமுகவை தூங்க விடாமல் கண்ணில் விரலை விட்டு ஆட்டி கொண்டிருக்க, மறுப்பக்கம் திமுகவுக்கு மாற்று அண்ணாமலை தான் என்கிற சூழல் தமிழக அரசியல் களத்தில் உருவானது.
இதனை தொடர்ந்து திமுக – எடப்பாடி இருவரும் சேர்ந்து போட்ட ஒப்பந்த படி, அண்ணாமலை இருவருக்கும் மிக பெரிய இடையூறாக இருக்கிறார். அதனால் அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து பாஜக தூக்கி விட்டால் அண்ணாமலை டம்மியாகி விடுவார், திமுகவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, அதே போன்று திமுகவுக்கு மாற்றான தலைவர் எடப்பாடி தான் என்கிற சூழல் உருவாகி விடும் என்பது தான், திமுக – எடப்பாடி இருவரும் சேர்ந்து செய்த சூழ்ச்சி ஒப்பந்தம் என்றும்.
அதனால் தான் அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி வருவோம் என எடப்பாடி டெல்லி பாஜக தலைமைக்கு கோரிக்கை வைக்க, ஆனால் உளவு துறை மூலம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அறிந்து கொண்ட அமித்சா, தமிழக பாஜக மாநில தலைவராக வரும் 2026 தேர்தல் வரை அண்ணாமலை தொடர்வார் என்பதில் அமித்ஷா உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.