எடப்பாடி தூக்கி போடும் எலும்பு துண்டு… முழு கொத்தடிமையாக மாறிய ரங்கராஜ் பாண்டே…

0
Follow on Google News

வலது சாரி பத்திரிகையாளராக பார்க்கப்பட்டு வந்த ரங்கராஜ் பாண்டே சங்கி இல்லை அவர் டயர் என சமீபத்திய அவருடைய பேச்சு மூலம் அம்பலப்பட்டு வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட பாஜக ஆதரவாளர்கள், மற்றும் பாஜக தொண்டர்கள், அட இவருக்கா நம்ம சில்லறையை சிதறவிட்டோம், கடைசியில் பாஜகவுக்கு எதிராக NARRATIVE செட் செய்ய எடப்பாடிக்கு முட்டு கொடுத்து முழு டயராக மாறி இருக்கும் ரங்கராஜ் பாண்டேவை பார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆரம்ப கட்டத்தில் தங்களை பாஜக ஆதரவாளராக காட்டி கொண்ட சில பத்திரிகையாளர்கள், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும் சரி, தற்பொழுதும் சரி, எடப்பாடி பழனிச்சாமி மிக பெரிய ஆளுமை என்றும், எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் பாஜக கூட்டணி வைக்க வில்லை என்றால், தமிழகத்தில் பாஜக கதி அவ்வளவு தான் என ஒரு NARRATIVE செட் செய்யும் வேலைகளை செய்து வருவதை பார்க்க முடிந்தது.

ஆனால் இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு முட்டு கொடுத்து, அண்ணாமலை தலைமையிலான பாஜகவை மட்டம் தட்டும் இவர்கள் யாருமே, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் தேமுதிக தவிர்த்து யாருமே கூட்டணி வராததையும், அதிமுக போட்டியிட்டு டெபாசிட் இழந்த தொகுதிகளை பற்றியும் பேச மாட்டார்கள்.

மேலும் கடந்த 2024 நாடளுமன்ற தேர்தலின் போது, அண்ணாமலை தலைமையிலான பாஜக உடன் கூட்டணி அமைத்த பாமக, TTV தினகரன் உட்பட பல கட்சிகளுக்கு அண்ணாமலை மீது இருந்து நம்பிக்கை ஏன் எடப்பாடி மீது இல்லை என்பதை பற்றியும் வாய் திறக்க மாட்டார்கள். இப்படி தமிழக அரசியலில் திமுகவுக்கு மாற்று பாஜக தான் என தமிழக மக்களின் மனநிலையில் இருந்தாலும், களத்தில் என்ன என்பது பற்றி களத்தில் சென்று பார்க்காமல், ஏசி ரூமில் உட்காந்து கொண்டு, தங்களை வலது சாரி ஆதரவாளர்கள் என்று காட்டி கொண்டு, அவர்களை பின் தொடரும் வலது சாரி ஆதரவாளர்கள் மத்தியில், பாஜகவுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு ஆதரவாகவும் ஒரு NARRATIVE செட் செய்து வருவதை அவர்கள் பேச்சின் மூலம் பார்க்க முடிகிறது.

இதில் ரங்கராஜ் பாண்டே, கடந்த வாரம் வரை அதிமுகவோட முதல் விருப்பம் தமிழக வெற்றி கழகம் தான், இரண்டாவது நாம் தமிழர் கட்சி, இந்த இரண்டும் ஒத்து வரலை என்றால் தான் கடைசியில பாஜக என்று பேசி வந்தவர், இந்த வாரம் அதிமுக – பாஜக கூட்டணி முடிவாகி விட்டது என இவர் பக்கத்தில் இருந்து எடப்பாடியும் – அமித்ஷாவும் கையெழுத்து போடுவதை நேரில் பார்த்தது போன்று பேசி வருகிறார்.

இதில் தற்பொழுது ரங்கராஜ் பாண்டே பேசியதில், எடப்பாடி பழனிசாமி Tough negotiator , அவர் 2021 சட்டபை தேர்தலில் அமித்சா பேச்சை கூட கேட்கவில்லை என்று பேசம் ரங்கராஜ் பாண்டேவுக்கு, அமித்சா பேச்சை கேட்காததால், 2021ல் அதிமுக ஆட்சியை இழந்தது, தன்னை Tough negotiator என நினைத்து எடப்பாடி தலைமை ஏற்று சந்தித்த அணைத்து தேர்தலிலும் தோல்வியை தான் சந்தித்தார் என்பதை மறைந்து, எடப்பாடி Tough negotiator என மூச்சு முட்ட முட்டு கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் வலது சாரி பத்திரிகையாளர் என காட்டிக்கொண்டு, பாஜகவுக்கு எதிராக narrative செட் செய்யும் வகையில், இன்று திமுகவை எதிர்த்து களமாடி தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்று தலைப்பில் பேசுவதும், எடப்பாடி Tough negotiator என சொம்படிப்பதும் பார்க்கும் பொழுது, எடப்பாடி யால் களம் இறக்கப்பட்டவர்கள் தான் இவர்கள் என்கிற விமர்சனமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!