தொகுதியை கைப்பற்றுவதில் கௌதமி – ராஜேந்திர பாலாஜி இடையே கடும் போட்டி.! யாருக்கு ராஜபாளையம் தொகுதி.?

0
Follow on Google News

அதிமுக பாஜக இடையே ராஜபாளையத்தில் யார் போட்டியிடுவது என கடும் போட்டி நடைபெற்று வருகிறது. நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவுடன் கூட்டணி பங்கீட்டில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது அதிமுக, ஆனால் எந்தத்த தொகுதிகள் என பேச்சுவார்த்தை முழு கட்டமாக முடியவில்லை. இன்று அல்லது இரு தினகளுக்குள் இந்தத்த தொகுதிகள் என உறுதி செய்யப்பட்ட பின்பு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் அதற்குள் பாஜக, அதிமுகவும் அவரவர்கள் கட்சிக்கு ஆதரவாக ஒரே தொகுதியில் போட்டி போட்டு கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அதிமுக பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி இந்த முறை நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். ஆனால் அதே தொகுதியில் நடிகை கௌதமி வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அதிமுக வேட்பாளரான ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக ராஜபாளையம் தொகுதியில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், அதே போன்று . அதற்குப் நடிகை கௌதமியும் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், இந்நிலையில் இரு தினங்களில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது யார் என்பது தெரிவித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.