சபரீசன் உடன் காயத்ரி ஒரு மணி சந்தித்து பேசியது என்ன.? அம்பலப்படுத்திய பாஜக முக்கிய தலைவர்.!

0
Follow on Google News

கடந்த சில தினங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக தொடர்ந்து சமூக வலைத்தளத்தின் மூலம் விமர்சனம் செய்து வந்து பாஜக கட்சிகள் பல குழப்பத்தை ஏற்படுத்தி வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி சூர்யா ஆடியோ விவகாரத்தை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் மற்றும் பாஜக கட்சிக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் தன்னுடைய பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும் கடந்த கால காயத்ரி ரகுராம் நடவடிக்கைகளும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முரண்பாடாக செயல்பட்டு வந்தது பல நேரங்களில் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தற்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவர் செயல்பட்டு வருவது போன்று இதற்கு முன்பு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு எதிராக பேட்டி கொடுத்து தலைவர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருந்து வந்தவர் காயத்ரி ரகுராம்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான திருச்சி சூர்யா அடியோ விவகாரத்தை குறிப்பிட்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் கருத்து பதிவு செய்திருந்த காயத்ரி ரகுராம், பாஜக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கும் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததால் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடரும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்கின்ற அதிரடி அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட பின்பு அவர் சந்தித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தலைவர் மீது இருந்த வன்மம் வெளிப்படும் வகையில் அவருடைய ஒவ்வொரு பேச்சும் இருந்தது.

இதனால் மேலும் திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் பின்னணியில் காயத்ரி சதி ஏதேனும் இருக்கின்றதா என்கின்ற சந்தேகம் பாஜக கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், பாஜக முக்கிய தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார், அதில் காய்த்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல், சபரீசனை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர விடுதியில் காயத்ரி ரகுராம் சந்தித்து பேசியதாக குறிப்பிட்ட அமர் பிரசாத் ரெட்டி.

இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றதாகவும், எனவே பாஜகவில் துரோகிகளுக்கு இடமில்லை, சரியான நேரத்தில் சரியான முடிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ளதாக அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சபரீசன் சந்திப்பு குறித்து பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம் தனது தோழியின் பிறந்தநாளுக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை அழைத்தது போல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது சபரீசனையும் அழைத்துள்ளனர். இது ஒரு எதிர்பாராத சந்திப்பு என காயத்ரி ரகுராம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் எதிர்பாராத சந்திப்பு எப்படி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்கிற சந்தேகத்தை பாஜகவினர் எழுப்பியுள்ளனர், மேலும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக கருத்து தெரிவித்து வந்த காயத்ரி ரகுராம் கடந்த மாதம் சபரீசன் உடனான சந்திப்புக்கு பின்பு தான் இவ்வாறு செயல்பட்டு வருகிறார், மேலும் திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் பின்னனியில் காயத்ரி ரகுராம் சதி திட்டம் இருக்கலாம் என்கிறது பாஜக வட்டாரங்கள்.