இன்று தமிழக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வருவது யார் அந்த தம்பி என அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து லண்டனுக்கு தப்பிச்சென்ற உதயநிதியின் நெருங்கிய நண்பரும், உதயநிதியின் பினாமி என்று கூறப்படும் ரத்தீஷ் பற்றி தான் விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரத்தீஷ் லண்டன் தப்பி செல்லும் வரை அவரைப் பற்றி யாருக்கும் எந்த விவரமும் தெரியாமல் இருந்தது.
அமலாக்கத்துறை நெருங்கி வருவதை அறிந்து ரத்தீஷ் தப்பிச் சென்ற பின்பு தான் டாஸ்மாக் மூலம் நடந்த ஊழல் பணத்தை மிகப்பெரிய அளவில் கையாண்டு இருக்கிறார் ரத்தீஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரத்தீசின் குடும்ப பின்னணி என்ன.? எப்படி அவர் உதயநிதி ஸ்டாலினிடம் நெருங்கி பழகினார்.? மேலும் அரசாங்கத்தில் நடக்கும் டென்டர்கள் முதல் டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் ஊழல் பணம் வரை, இவை அனைத்தையும் கையாண்டு மணிலாண்டரிங் செய்யும் அளவிற்கு நன்றாக உயர்ந்தது எப்படி என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

திருச்சியில் ரத்தீசின் தந்தை சண்முகவேல் ஸ்பீக் நிறுவனத்தின் ஊழியர் ஆக ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். பின்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து வேளச்சேரியில் ஒரு வீடு காட்டுகிறார் ரத்தீசின் தந்தை சண்முகவேல். இதுதான் அவருடைய தந்தைக்கு முதல் கனவு இல்லமும் கூட.
சண்முகவேல் புதிதாக கட்டும் வீட்டின் அருகிலேயே அன்பில் மகேஷ் வீடும் இருக்கிறது. ரத்தீஷ் – அன்பில் மகேஷ் இருவரும் பூர்வீகம் திருச்சி என்பதால் எளிதாக நண்பர்களாக பழகத் தொடங்குகிறார்கள், இப்படி பள்ளி பருவத்தில் இருந்து அன்பில் மகேஷும் ரத்தீசும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் 2014 காலகட்டத்தில் அன்பில் மகேஷ் மூலம் உதயநிதி ஸ்டாலின் ரத்தீஷுக்கு அறிமுகமாகிறார்.
இப்படித்தான் உதயநிதி ஸ்டாலினுக்கும் ரத்தீசுக்கும் இடையிலான நட்பு தொடங்குகிறது, நாளடைவில் ரத்தீஷ் உதயநிதியின் நம்பிக்கை கூறியவராகவும் இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில் ரத்தீசின் தந்தை சண்முகவேல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவராகவே இருந்து வந்த நிலையில், 2021 திமுக ஆட்சிக்கு பின் அவருடைய பெயரில் ஐந்து நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது.
அதில் நான்கு நிறுவனங்கள் இருந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியேறுகிறார் சண்முகவேல், தற்பொழுது ஒரு நிறுவனம் மட்டுமே ரத்தீசின் தந்தை சண்முகவேல் கைவசம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ரத்தீஷ் தந்தை மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழிலை செய்து வருகிறார், சாதாரணமாக கிடையாது சுமார் 20 கோடி வேண்டுமென்றாலும் ரத்தீஸின் தந்தையிடம் பைனாஸ் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
அந்த அளவிற்கு அசுர வளர்ச்சியை ரத்தீஷ் குடும்பம் 2021 திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அடைந்திருக்கிறது. ரத்தீஷ் பெருமைப்பாலும் பொது இடங்களில் தென் பட மாட்டார், அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் ஒரு சில புகைப்படம் மட்டுமே இருக்கும். மேலும் தற்பொழுது அமலாக்க துறை ரேடாரில் ரத்தீஷ் மட்டுமில்லை, அபினேஷ் என்கிற மற்றொரு நபரும் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில் அதிபரான அபினேஷ்க்கு முதல் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இவர் கடந்த வருடம் வெளிநாட்டில் இருந்து சுமார் 84 லட்சம் மதிப்புள்ள ஒரு விஸ்கியை வாங்கி வந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் அபினேஷ் மது அருந்தும் பழக்கம் இல்லை என கூறப்படும் நிலையில் யாருக்கு அந்த 84 லட்சம் மதிப்புடையை விஸ்கி வாங்கினார் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது .