வரும் 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏற்கனவே திமுகவில் ஒருங்கிணைப்பு குழு ஒன்று இயங்கி வரும் நிலையில், தற்போது மண்டல் பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமிக்க இருக்கிறது, இந்த மண்டல் பொறுப்பாளர்களில் ஏழு பேர் இடம் பெற இருக்கிறார்கள், அதில் அமைச்சர் கே என் நேரு, திமுக எம்பி கனிமொழி மற்றும் ஆர் ராசா உட்பட ஏழு பேர் இடம் பெற இருக்கிறார்கள்.
குறிப்பாகவே கனிமொழியும் ஆ ராசாவும் டெல்லி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர்கள் தற்பொழுது மாநில அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் கருணாநிதி மறைவுக்கு பின்பு திமுகவில் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முற்றிலும் ஓரம் கட்டப்பட்டு வந்தார்.

அதுவும் இதற்கு முன்பு கனிமொழி ராஜ்யசபா எம்பி என்பதால் குறிப்பிட்ட எந்த ஒரு தொகுதிக்கும் சென்று அரசியல் செய்ய முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டிருந்தது, அதை முதலில் முறியடிக்கும் வகையில் தூத்துக்குடியில் நேரடியாக தேர்தல் களத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, கள அரசியலில் தீவிரம் காட்டி, கடந்த ஆறு வருடங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி நெல்லை தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலும் தன்னுடைய ஆதரவாளராக மாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடியில் திமுகவில் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டத்தின் முகமாக உருவெடுத்து வருகிறார் கனிமொழி. இதற்கு முக்கிய காரணம் முதல் குடும்பம் தன்னை படிப்படியாக அரசியல் ஓரங்கட்ட வருவதால், முதலில் தனக்கான ஆதரவாளர்களை ஏற்படுத்திக்க வேண்டும் என்று முடிவு செய்து கனிமொழியின் கள அரசியல் தான் தற்பொழுது அவருக்கு கை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் கனிமொழி தற்பொழுது முதல் குடும்பத்திற்கு செக் வைக்கும் விதத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தனக்கு எம்பி பதவியை துறந்து மாநில அரசியலில் உதயநிதிக்கு சவாலாக களம் இறங்கும் வகையில் வரும் சட்டசபை தேர்தலில் சீட் கேட்டு காய்களை நகர்த்தி வந்துள்ளார். ஆனால் கனிமொழியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத சூழல் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொறுப்புகளும் வேண்டும் என்று கனிமொழி காய்களை நகர்த்தி விரைவில் அமைக்கப்பட இருக்கும் மண்டல பொறுப்பாளர்களில் பட்டியலில் இடம் பெற இருக்கிறார். இந்நிலையில் தென் மண்டலத்தை இரண்டாக உடைத்து அதில் ஒரு பகுதி அமைச்சர் தங்கம் தென்னரசும் மற்றொரு பகுதியான கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை தென்காசி ஆகியவை கனிமொழி மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட இருக்கிறார்.
இதில் கனிமொழி கைவசம் சுமார் 22 சட்டமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட இருக்கிறது, அதேபோன்று கனிமொழியின் ஆதரவாளரான ஆ ராசாவுக்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 37 தொகுதிகள் ஒப்படைக்கப்பட இருக்கிறது, மேலும் ஏற்கனவே முதல் குடும்பத்தின் மீது அதிருப்தியில் இருந்து வரும் கே என் நேருவிற்கு திருச்சி மற்றும் டெல்டா பகுதியில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகள் அவர் கைவசம் ஒப்படைக்க இருக்கிறது.
அதே நேரத்தில் மாநில அரசியலில் என்றி கொடுத்துள்ள கனிமொழி எதிர்காலத்தில் தென் மண்டலத்தை முழுவதும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கான காய்களை நகர்த்தி வருவது உதயநிதியின் எதிர்கால அரசியலுக்கு மிகப்பெரிய ஆப்பாக அமைந்துவிடு என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது