நாள் ஒன்றுக்கு சுமார் 1.20 கோடி முதல் ஒன்றரை கோடி பாட்டில் டாஸ்மாக் மூலம் விற்பனை நடைபெறுவதாகவும், ஆனால் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் பாட்டில் மட்டுமே டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்டுவதாக கணக்கில் காட்டப்பட்டு, மீதம் விற்கப்படும் பாட்டில் ஊழல் பணமாக செல்கிறது என்பதை, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது அலைகளில் நடந்த சோதனை மூலம் அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
இந்த நிலையில் டாஸ்மாக் மூலம் வருடத்திற்க்கு சுமார் 45 ஆயிரம் கோடி வருவாய் தமிழக அரசுக்கு வருகிறது என்றால், அதே அளவு வருவாய் கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படும் ஊழல் பணம், டாஸ்மாக் கடைகளில் இருந்து எங்கே, யாரிடம், எதன் மூலமாக செல்கிறது என்கிற தகவலும் ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்க துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் தொழிலாக, இன்று சினிமா தயாரிப்பு நிறுவனம், மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம், ஒரு படத்தை தயாரித்து அந்த படம் வெறும் 50 கோடி வசூல் செய்தால் கூட, அந்த படம் 300 கோடி வசூல் செய்தது என ஒரு போலியான கணக்கை கொண்டு வந்து, ஊழல் பணமாக வந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் வேலைகள் சினிமா துறை மூலம் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அந்த வகையில் டாஸ்மாக் மூலம் கணக்கில் காட்டப்படாத ஊழல் பணம் உதயநிதிக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கா என தோண்டி எடுக்க தொடங்கியுள்ளது அமலாக்க துறை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாஸ்மாக் மூலம் வரும் ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு ஹவாலா பணமாக சென்று, வெளிநாடுகளில் இருந்து கட்சி நிதியாக வந்துள்ளதற்கான ஆதாரமும் அமலாக்க துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் நடந்தது போன்று, மதுபான ஊழலில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருந்தது மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு ஊழல் பணம் நிதியாக வந்தது போன்று தமிழ்கத்தில் ஆளும் திமுக அரசின் முதன்மை குடும்பத்துக்கு டாஸ்மாக் மூலம் வந்த ஊழல் பணம் சென்றுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள், மற்றும் திமுக கட்சிக்கு நிதியாக சென்றதற்கான ஆதாரத்தை சேகரிக்கும் வேளையில் அமலாக்க துறையினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்பொழுது நடந்த அமலாக்க துறை சோதனையில் சில முக்கிய ஹார்ட் டிஸ்க்கள் அமலாக்க துறை அதிகாரிகள் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்த ஹார்ட் டிஸ்க் தான் திமுக ஆட்சிக்கு, திமுக கட்சிக்கு எமனாக இருக்க போகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது, அந்த ஹார்ட் டிஸ்க்குகளில், கணக்கில் காட்டப்படாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதற்கான குறிப்புகள் இடம் பெற்று இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க்கள் மூலம், மேலும் சோதனையில் சிக்கிய முக்கிய அவங்களின் அடிப்படையில் அடுத்தடுத்து விசாரணையை தொடங்க இருக்கும் அமலாக்க துறை, இதில் உதயநிதியை டார்கெட் செய்து தான் விசாரணையை முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும், மேலும் எப்படி மதுபான ஊழலில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாரோ, தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா சிறையில் அடைக்கப்பட்டாரோ.!
அதே போன்று உதயநிதி ஸ்டாலினை இந்து டாஸ்மாக் சோதனையில் தட்டி தூங்குவதற்காக அமலாக்க துறை அதிகாரிகள் உதயநிதியை சுற்றி வளைத்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ஒட்டு மொத்த திமுக கூடாரமும் அடுத்த என்ன நடக்குமோ என்கிற ஒரு வித அச்சத்தில் இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.