போலீசார் மீது தாக்குவதால்..மராட்டியத்தில் வெடித்தது கலவரம்..!

0
Follow on Google News

மகாராஷ்டிரா : மஹாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அடிக்கடி தாக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பை கார்ப்பரேஷன் கமிஷனர் ஒருவரின் கையை சமூகவிரோதிகள் பட்டப்பகலில் துண்டாக்கினர். அதேபோல பெண் ஊழியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் (கடந்த வருடம் இரண்டு ஹிந்து சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட அதே மாவட்டம்) போய்சர் பகுதியில் அமைந்துள்ள ஸ்டீல் தொழிற்சாலையில் பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. யூனியன் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி ஆலையில் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அலுவலகத்தை சூறையாடினர். தகவலறிந்த போலீசார் ஸ்டீல் ஆலைக்கு விரைந்தனர். போலீசாரை கண்ட யூனியன் ஆட்கள் போலீசாரை கடுமையாக தாக்க தொடங்கினர். போலீசாரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

மேலும் போலீசாரை நோக்கி கல்லெறிய தொடங்கினர். போலீசாருக்கு சொந்தமான 13 ஜீப்புகள் சேதபப்டுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்ப்படவில்லை எனினும் 27 போலீசார் உட்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக 27பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பலரை அடையாளம் காணும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் கொலைமுயற்சி, வன்முறையில் ஈடுபட்டது, குற்ற சம்பவத்தில் தொடர்பு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பால்கர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிற்பேட்டை அமைந்துள்ள போய்சர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பதட்டத்தை தணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.