நீதா அம்பானி அணிந்திருந்த 500 கோடி ரூபாய் நெல்கஸ் வெறும் 178 ரூபாய் தான்… அப்ப.. அது ஒரிஜினல் இல்லையா.? என்னடா இது நீதா அம்பானிக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் முதல் கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது இதில் பாப் பாடகி ரிஹான்னா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார், இந்த நிகழ்ச்சியில் ரிஹான்னாவுக்கு 74 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் மகள் ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரபல கலைஞர் பீயான்ஸ் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதற்காக அப்போது பீயான்ஸ்க்கு 33 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே போன்று முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியின் திருமண நிகழ்ச்சியிலும் உலகப் புகழ்பெற்ற பாடகரான ஜான் லெஜெண்ட் பங்கேற்று திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தினார். இதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டது

இந்நிலையில் தற்போது 60 வயதாகும் நீதா அம்பானி சருமத்தின் ரகசியம் அவர் குடிக்கும் பீட்ரூட் ஜூஸ் தான் என கூறப்படுகிறது. பீட்ரூட்டில் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் வயது முதிர்வை வெளிக்காட்டாது, அதாவது சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்க பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது.

பீட்ரூட்டின் இயற்கையான நிறமிகள் சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளின் தோற்றத்தைக் குறைக்கவும், பளபளப்பான நிறத்தைப் பெறவும் செய்கிறது, பீட்ரூட்டில் நிறைந்துள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது, மேலும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இது நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது தோலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது,

அந்த வகையில் தொடர்ந்து பீட் ரூட் ஜூஸை விரும்பி நீதா அம்பானி அருந்தி வருவதால் தான் அவர் இன்றும் இளமையாக தோற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் முதல் கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீடா அம்பானி காஞ்சிபுரம் புடவையுடன் அணிந்திருந்த மரகத நெக்லஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நெக்லஸின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், நீடா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் போலவே இந்திய சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அந்தவகையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் நீடா அம்பானி நெக்லெஸ் விலை வெறும் ரூ.178 என கூறி விற்பனை செய்யக்கூடிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த நெக்லஸ் ஆனது பல்வேறு வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதாவது நீடா அம்பானி அணிந்திருந்த 500 கோடி ரூபாய் நெக்லஸ் வெறும் 178 ரூபாய்க்கு அசல் போன்றே டுப்ளிகட் செய்து அதற்கு நீடா அம்பானி நெக்லஸ் என பெயரிட்டு செம்ம ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.