பிரமாண்ட உல்லாச கப்பல்… நடுக்கடலில் 3 நாட்கள் நடக்கும் ஆனந்த் அம்பானி திருமண விழா…

0
Follow on Google News

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை வருகிறது ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம் நகரில் ஆனந்த அம்பானி ராதிகா மிருதன் தம்பதியின் முதல் பிரீ வெட்டிங் கொண்டாட்டம் கோலாகலமாக நடத்தப்பட்டது.

இந்த விழாவில் பில்கேட்ஸ் முதல் கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் வரை ஏராளமான பணக்காரர்கள் கலந்து கொண்டனர். சுமார் 1250 கோடி ரூபாய் செலவில் ஜாம் ஜாம் என்று இந்த விழாவை நடத்தி முடித்தார் அம்பானி. ஆடம்பரமும் பிரம்மாண்டமும் கூடி ஆரவாரமாக நடத்தப்பட்ட இந்த விழா குறித்து இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படியான நிலையில், மீண்டும் வருகிற மே 28ஆம் தேதி முதல் மே 30 வரை ஆனந்த அம்பானியின் இரண்டாவது பிரி வெட்டிங் திருவிழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியிலேயே அதிபிரம்மாண்டத்தை காட்டிய அம்பானி, இரண்டாவது விழாவை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக நாம் கற்பனை செய்து கூட பார்க்காத அளவிற்கு அடுத்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆம், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் தம்பதியின் இரண்டாவது பிரி வெட்டிங் கொண்டாட்டம் நடுக்கடலில் சொகுசு கப்பலில் ஆடம்பரமாக நடைபெற இருப்பதாக பல ஊடகங்களில் வெளியான அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான தகவல்களின்படி, அம்பானி குடும்பத்தினர் மற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்களுடன் செல்லும் இந்த சொகுசு கப்பல், இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து தெற்கு பிரான்சுக்கு பயணிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த கொண்டாட்டத்தில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம், அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், சொகுசு கப்பலில் விருந்தினர்களுக்கு பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க சுமார் 600 பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மே 28ஆம் தேதி அன்று இத்தாலியில் இருந்து புறப்படும் பிரம்மாண்ட உல்லாச கப்பல் சுமார் 2365 கடல் மயில்கள் கடந்து அதாவது 4380 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட உல்லாச கப்பல் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள், ஆடம்பரமான அலங்காரங்கள் என தனித்துவமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, மார்ச் மாதத்தில் நடைபெற்ற முதல் பிரீ வெட்டிங் விழாவில் உலகப் புகழ்பெற்ற பாடகி ரிஹானாவை 74 கோடி ரூபாய்க்கு அழைத்து வந்து அதிரடி காட்டிய அம்பானி, இந்த விழாவிற்கு யாரையெல்லாம் அழைத்து வர போகிறார், எவ்வளவு கோடிகளை செலவு செய்யப் போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த முறை வித்தியாசமாக நடுக்கடலில் விழாவை நடத்த திட்டமிட்டுள்ள அம்பானி குடும்பத்தினர் மற்றொரு பிரம்மாண்டத்தை காட்டி உலக மக்களின் கவனத்தை இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.