உத்திரப்பிரதேச பாஜகவில் அதிரடி மாற்றம்.. கடும் நெருக்கடியில் யோகி ஆதித்யநாத்…

0
Follow on Google News

உத்திரபிரதேசம் : இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பிஜேபி தனக்கென ஒரு வரைமுறையையும் பாதையையும் வகுத்துக்கொண்டுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்து வரும் பிஜேபி தனது கட்சியில் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலையடுத்து பிஜேபி மாநில பொறுப்புகளில் விரைவில் மாற்றம் வரவிருப்பதாக பிஜேபி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் மாற்றம் உறுதியாக இருக்கும் என நம்பப்படுகிறது. உத்திரபிரதேச கட்சி அமைப்பை மறுசீரமைக்க தேசிய தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து பிஜேபிக்கு வந்த பன்சாலை டெல்லி அல்லது ஒடிசாவுக்கு மாற்றலாம் எனவும் அவருக்கு மாற்றாக அடுத்த தலைவரை தேடுவதாகவும் ஆதாரபூர்வ தகவல்கள்வெளியாகியுள்ளன. குறிப்பாக பொதுச்செயலாளர் (அமைப்பு ) பதவிக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. இருந்தாலும் மாநிலம் முழுவதும் உள்ள பிஜேபியில் பொதுச்செயலாளர் ( அமைப்பு ) ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் தொடர்புடையவரே தேர்நதெடுக்கப்படுவார் என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருந்தாலும் மாநில தலைவர் மற்றும் பொதுச்செயலாளரை மாற்றும் முடிவில் பிஜேபி தீவிரமாக இருப்பதை சில நிகழ்வுகளால் உறுதிப்படுத்தமுடிகிறது. ஆனால் அரசியல் விமர்சகர்கள் ” முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கும் பொதுசெயலாளருக்கும் இடையேயான தொடர்பு நீண்டகாலமாக சொல்லிக்கொள்ளும்படி சுமூகமாக இல்லை.எனவே கட்சியில் மாற்றம் இருக்கும்” என கூறுகின்றனர்.

அமித்ஷாவுக்கு நெருக்கமான பன்சால் 2014 லோக்சபா தேர்தலுக்காக உத்திரபிரதேசம் வரவழைக்கப்பட்டார். ஏபிவிபியில் பிரச்சாரக்காக இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 2014 மக்களவை தேர்தலில் 80 இடங்களில் 71 இடங்கள் வென்றதோடு 2017 சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார். ஒருவர் ஒரு பதவி என்ற கொளகைப்படி புதிய தலைவரை மாநில பிஜேபி நியமிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் நிர்வாகிகள் புதிய முகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.