சீனாவிடம் டுப்ளிகேட் ஏவுகணை வாங்கி ஏமார்ந்த பாக்கிஸ்தான்… இடை மறித்து துவசம் செய்த இந்தியா…

0
Follow on Google News

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ நடவடிக்கையை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதிலடி தரும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏனைய எல்லை மாநிலங்களிலும் பரபரப்பான சூழல் உள்ளது.

பாகிஸ்தானுடன் 1,037 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மாகாணம், உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளது. எல்லை முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாம் மாநிலம் அமிர்தசரசை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் அமிர்தசரஸை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது. பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை இந்திய ராணுவம் நடுவானில் அழித்தொழித்தது. அதாவது பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது.

பஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது. தற்போது பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவத்தால் வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் பாகங்களில் சீன எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சீனாவிடம் இருந்து வாங்கிய P15E ஏவுகணையை இந்தியப் பகுதியை நோக்கி பாகிஸ்தான் ஏவியது அம்பலம் ஆகி உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் பொதுமக்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் பொது இடங்களில் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையை ஓட்டிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியாவை திரும்பத் தாக்கும் நிலை உருவாகி வாய்ப்பு இருப்பதால், எல்லை மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், போலீசாருக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் மாநில காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், விமான மருத்துவ சேவை சங்கம் மற்றும் விமான போக்குவரத்து மேலாண்மை, ஆய்வுகள் அகாடமியின் மருத்துவ அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, மருத்துவ அதிகாரிகள் எந்த இடத்தில் பணியில் அமர்த்டினாலும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர் நகரங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை மின்சாரத்தை நிறுத்த உத்தரவு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here