சீன ராணுவ தளவாடங்களை துவம்சம் செய்த இந்தியா… பாகிஸ்தானுக்கு ஆதரவாக வந்து பலத்த அடி வாங்கிய சீனா…

0
Follow on Google News

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாக்கிஸ்தானுக்குள் புகுந்து பதில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்தியாவின் எல்லைப்புற மாவட்டங்களில் ஏவி தாக்குதல் நடத்தியது. ஆனால் அதை இந்திய ராணுவம் முறியடித்தது. மேலும் பாக்கிஸ்தான் விமானத் தளங்களை தாக்கிஅழித்தது இந்தியா.

ஆபரேஷன் சிந்தூர்” என்பது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் போல் காணப்பட்டாலும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்ற நாடுகளுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்கிய S-400 ஏர்படை காப்பு அமைப்பையும், நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளையும் இஸ்ரேலிலிருந்து வாங்கிய டிரோன்களையும் பயன்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆரம்பத்தில் அமெரிக்க ஆயுதங்களை வாங்கி வந்தாலும், சமீப காலங்களில் சீனாவிடம் அதிகமாக வாங்கியுள்ளது,. சீனா, பாகிஸ்தானின் பாதுகாப்பு தேவைகளில் 82% வழங்கி வருகிறது. அதில் போர் விமானங்கள்,ஏர்படை காப்பு அமைப்புகள் உள்ளன. இவையனைத்தும் இருந்த போதும், பாகிஸ்தானின் உட்பகுதிகளில் பல விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இதனால் சீனாவின் ஏர்படைக் காப்பு அமைப்பின் பலவீனம் வெளிச்சமாகியுள்ளது அதே நேரத்தில் சீனாவின் டிரோன்கள் மற்றும் போர் விமானங்களும் இந்தியாவின் ஏர்படை பாதுகாப்பு அமைப்பான சுதர்சன சக்கரதால் அழிக்கப்பட்டன. இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட டிரோன் காமிகாஸ், ருஸ்தம், நேத்ரா ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பம் சார்ந்தவை.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றக்கூடிய ஆயுத விநியோகஸ்தராக சீனா உருவாக முயற்சி செய்து வரும் நிலையில், இந்தியாவின் தாக்குதல்கள் சீனாவின் ஆயுத உற்பத்தி திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆபரேசன் சிந்தூர் தாக்குதலால் இந்தியா பயன்படுத்திய சுதர்சனம் சக்கரம் மற்றும் F-16, JF-17, J-10C போன்றவற்றை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.

எனவே இந்தியாவின் தாக்குதல் என்பது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் ஒரு பெரிய இழப்பாகும் இந்நிலையில், இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறுகையில் ‘ பாகிஸ்தான் தன்னுடைய எல்லையை பாதுகாக்கும் முயற்சியில் சீனா ஆதரவாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டர், ‘ இந்தியாவின் நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஆதரவாக இருப்பதாக உறுதியளித்தார். ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தத்தின்படி, தொடர்ந்து இரு நாடுகளும் கூட்டுறவுடன் செயல்படும் அலெக்சாண்டர் தெரிவித்ததாக அமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்தார். ரஷ்யாவுக்கு இந்தியா வழங்கிய ராணுவ தளவாடங்கள் விரைவில் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்த போர் சீனாவின் ராணுவ தயாரிப்புகளின் நிலை மற்றும் அவை எதிர்கால சந்தைகளில் எவ்வாறு எதிர்பார்க்கப்படுகின்றன என்பதையும் கணிக்க முடிகிறது.இந்த மோதல், ஒரு வெறும் நில எல்லைத் தகராறு அல்ல; இது ஒரு உலகளாவிய ராணுவ சோதனை.அத்துடன், .சீனாவின் பங்கு மற்றும் அதன் ராணுவ பங்குதாரர்களின் வியூகக் கணிப்புகள் இந்த மோதலால் வலுவடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here