தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த உணவுகளில் சில அவருக்கு கிடைக்கவில்லை. இதை பற்றி சொமேட்டோவில் கஸ்டமர் கேர் சாட் பாக்சிலும் அவர் பேசி இருக்கிறார். சொமேட்டோ அதிகாரி உங்களின் ஆங்கிலத்தால் என்னால் உங்களுடன் சரியாக பேச முடியவில்லை. இந்தியாவின் தேசிய மொழி இந்தி.. நீங்கள் இந்தி தெரிந்து வைத்து கொள்ளலாம் என பதில் அளித்துள்ளார்.
அந்த சொமேட்டோ பெண் அதிகாரியின் பதில் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்டை இணையம் முழுக்க வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதை மொழி பிரச்சனையாக ஒரு சிலர் சித்தரித்து தமிழ் மொழிக்கு எதிரானது சொமேட்டோ நிறுவனம் என்றும், மேலும் தமிழர்கள் சொமேட்டோவை புறக்கணிக்க வேண்டும் என இணைய தளத்தில் ஒரு சிலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இதை பற்றி உடனடியாக விசாரிப்பதாக கூறிய சொமேட்டோ நிறுவனம்.
அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்கிவிட்டு பின் மீண்டும் எச்சரிக்கை கொடுத்துவிட்டு பணியில் சேர்த்துக்கொண்டது. மேலும் சோமோட்டோ நிறுவனர் தீபந்தர் கோயல்.. இந்தியாவில் இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மை கூடுதலாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சொமேட்டோ நிறுவனத்தில் வேலை செய்த ஒரு அதிகரிக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை அந்த நிறுவனத்துக்கு தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை போன்று சித்தரிக்கப்பட்டது.
இந்நிலையில் இதன் பின்னனியில் போட்டி நிறுவனங்கள் ஏதும் சொமேட்டோ நிறுவனத்துக்கு எதிராக செயல்படுகிறதா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில். தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முதல்வர் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அவரது குடும்ப உறுப்பினர்கள் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசன் பெயரில் புதியதாக 7 நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் அதில் ஓன்று தான் முதல்வர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரில் தொடங்கியுள்ள Sunshine Food & Beverages நிறுவனம்.
இந்நிலையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள Sunshine Food & Beverages நிறுவனத்துக்கு போட்டியாக இருக்க கூடிய தற்போது தமிழகம் மக்கள் மத்தியில் அதிக பயன்பாட்டில் இருக்கும் Zomato நிறுவனத்துக்கு எதிராக திட்டமிட்டு தமிழர்கள் மத்தியில் இந்த நிறுவனம் தமிழ் மொழிக்கு எதிரானது, மேலும் இந்தியை திணிக்கிறது என பிரச்சாரம் மேற்கொள்ள படுகிறதா என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.