ஜக்கி வாசுதேவ் விவகாரம்.. வழக்கு தொடர்வது எனது நோக்கம் அல்ல..! PTR தியாகராஜன் பரபரப்பு..

0
Follow on Google News

“ஜக்கி வாசுதேவ்” மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜாக்கி வாசுதேவ் பற்றி தான் ஏதும் பேச போவதில்லை என தெரிவித்துள்ளார். அவர் இன்று குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் முதன் முதலாக “ஜக்கி வாசுதேவ்” மற்றும் “இஷா ஃபவுண்டேசன்” குறித்த அறிய நேர்ந்தது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பொது கணக்குக் குழுவின் உறுப்பினராக கீழே படத்தில் ஒரு தணிக்கை ஆவணத்தில் உள்ள பத்தியில்தான் என சில குறிப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையின் பத்திகளைப் படித்தவுடன், நான் இதுகுறித்து விசாரிக்க தொடங்கினேன், விசாரணையில் இந்த நபரின் கடந்தகால வரலாற்றில் பல விதிமீறல்கள் மற்றும் சட்டரீதியான முரண்பாடுகளுக்கான முகாந்திரம் இருப்பதை அறிந்தேன். ஆனாலும் கூட பொது வாழ்வில் எனது பல்வேறு கடமைகளில் அந்த தணிக்கையில் உள்ளதை சரி செய்வது என்பது தலையாய பணி அல்ல.

பொதுத்தளங்களில் அறிக்கைகளாக இந்த மீறல்களின் அளவு மற்றும் நோக்கம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தாலும் கூட உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு தனிப்பட்ட பொறுப்பு எதுவும் இல்லை.ஜக்கி வாசுதேவ் தனது அடுத்த விளம்பர யுக்தியாக “கோயில்களை தனியார்மயமாக்கு” என்று திரும்பும்போதுதான் அவரது நிலையை மட்டுமல்ல, அவரது உள்நோக்கம் மற்றும் பின்னணியையும் கேள்விக்குள்ளாக்கி நேர்காணல் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்.

ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல, எனது நோக்கம் அல்ல. நான் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொள்ளவுள்ள சான்றுகளின் அடிப்படையில், ஜக்கி வாசுதேவ் பல சட்டங்களையும் விதிகளையும் ஒவ்வொரு முறையும், தொடர்ச்சியாகவும் மீறியுள்ளார் என்பது அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும்.

எனினும், இந்திய & அமெரிக்காவில் உள்ள சம்மந்தப்பட்ட துறைகளும் அது சார்ந்த அதிகாரிகளும் எவ்வித இடையூறும் (அது என்னுடையதாக இருந்தாலும்) இன்றி இதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும். மேலும் இவரைக் குறித்து புது தகவல்களோ நிகழ்வுகளோ எழும் வரையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை.