சிறைக்கு செல்ல ஆயத்தமாகிறாரா மதன் ரவிச்சந்திரன்.?எந்தந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவாகிறது தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் ஸ்ட்ரிங் ஆபரேஷன் என்கிற பெயரில் யூ டுயூபர் மதன் ரவிசந்திரன் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ ஓன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு தனி நபர் குறித்த பிரச்சனை என்றால் அது அந்த தனி நபர் சார்ந்த பிரச்சனையாக பார்க்கப்பட்டிருக்கும், ஆனால் யூ டுயூபர் மதன் வெளியிட்ட வீடியோவில் பேசும் போது அவர் சார்ந்த கட்சி மற்றும் அந்த கட்சி நிர்வாகி மற்றும்,தொண்டர்கள் குறித்து பேசியதில் தான் மதன் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

இது குறித்து பாஜக முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், இதில் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் பாதிக்கப்ட்டுள்ளதாக குறிப்பிடும் மதன், ஆனால் இவர் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண்ணுக்கு உண்மையிலே நீதி வேண்டும் என்றால், அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்திருக்கலாம், அல்லது கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்திருக்கலாம்,ஆனால் இதில் எதையும் செய்யாமல், பாஜகவில் இருக்கும் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவு படுத்தும் நோக்கில் பேசியிருப்பதற்கு அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யலாம்.

மேலும் அந்த வீடியோவில் யூ டுயூபர் மதன் பேசுகையில், சிறிதும் தொடர்பு இல்லாமல் சிறுபான்மை மக்களை பாஜகவுக்கு எதிராக திசை திருப்ப முயற்சித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் அவர் பேசியதற்கு ஒரு வழக்கு பதிவு செய்யலாம், அடுத்ததாக திமுக மற்றும் பாஜக இடையில் கள்ள உறவு இருப்பதாக குறிப்பிட்டு பாஜக மற்றும் திமுக இரண்டு காட்சிகள் மீதும் களங்கம் ஏற்படுத்த முயற்சித்த யூ டுயூபர் மதன் மீது இதற்கு ஒரு வழக்கு பதிவு செய்யலாம்.

கட்சியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஸ்ட்ரிங் ஆப்பரேஷன் செய்துள்ளார் யூ டுயூபர் மதன், இதன் உள் நோக்கம் என்ன என்பது பற்றி காவல்த்துறை விசாரணை நடத்தி, காவல் துறை அல்லாமல் ஒரு தனி மனிதன் ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஈடுபட சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து, இதற்கு ஒரு வழக்கு மதன் மீது பதியப்படலாம் என அடுக்கடுக்காக மதன் மீது எத்தனை வழக்குகள் பதியப்படலாம் என தெரிவித்த பாஜக முக்கிய தலைவர்.

ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கலாம், சமீபத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார், பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றம்சாட்டியது போன்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காமல், கவல்த்துறையோ அல்லது கட்சி தலைமையோ குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என அந்த பாஜக முக்கிய தலைவர் மேலும் குறிப்பிட்டார்.