ஆம். அவள் ஒரு சிவப்பு விளக்கு தான்.! குஷ்புவை இழிவுபடுத்திய திமுகவினர்க்கு குஷ்புவின் தீவிர ரசிகனின் பதிலடி.!

0
Follow on Google News

நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக திமுகவினர் பதிவு செய்து வருவது. திமுகவுக்கு எதிராக கண்டன குரல் எழுந்துள்ளது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக, மற்றும் திமுக இணையதள அணி ஆகிய பெயர் கொண்ட முகநூலில், ஆயிரம் விளக்கில் ஒரு சிவப்பு விளக்கு என குஷ்பூவின் புகைப்படத்தை பயன்படுத்தி பதிவு செய்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில்.

நடிகை குஷ்பூவின் தீவிர சமூக வலைதள ஆதரவாளரும், பிரபல சமூக வலைதள அரசியல் விமர்சகருமான ஸ்டான்லி ராஜா என்பவர் கடுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது. தலைவி குஷ்பு பற்றி மிக கேவலமான அவதூறுகளை திமுக தரப்பு தொடங்கிவிட்டது, ஆயிரம் விளக்கில் ஒரு சிகப்பு விளக்கு என ஒரு பெண்ணை கேவலமாக பேசுவெதல்லாம் அவர்களுக்கே உரிய தரம் கெட்ட, நாகரீகம் இல்லாத , அறம் இல்லாத செயல், இதுதான் ஈவேரா மற்றும் கருணாநிதியும் சொன்ன பெண் விடுதலையா?

ஒரு பெண்ணை அதுவும் முன்பு திமுகவில் இருந்து ஏகபட்ட பழிகளை சுமந்த ஒரு பெண்ணை இப்படி ஏளனமும் இழிவும் செய்வதை கண்டிக்க வேண்டியது திமுக தலமையின் கடமை, டெல்லி, கல்கத்தா, பொள்ளாச்சி என எங்கெல்லாமோ பெண்களுக்காக ஓடிய கனிமொழி அம்மையார் இந்த மிக கொடுமையான நிந்தனையினை கேட்டும் அமைதியாய் இருப்பது மகா அதிர்ச்சி, திமுக தலைமை சம்பந்தப்பட்டவரக்ள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்ட ஸ்டான்லி ராஜா.

மேலும் , எங்கள் தலைவி சிகப்பு விளக்கு என சொன்னவனுக்கு நாம் தரும் பதில் இதுதான், ஆம் அவள் சிகப்பு விளக்குத்தான், திராவிட திமுக இம்சைகள் இதுகாலம் வெகு வேகமாக ஓடி கொண்டிருந்த அரசியல் சாலையில் அவள் ஒரு சிகப்பு விளக்கு, இனி உங்கள் பயணத்துக்கே தடை அரசியலுக்கே தடை என சொல்லும் சிகப்பு சமிக்கை விளக்கு. இந்திய அரச உச்சஸ்தானிகள் வரும் பொழுது அவர்கள் வாகனத்தின் உச்சத்தில் சுழலும் சிகப்பு விளக்கை போல், இங்கு தேசியம் பவனி வருகின்றது என்பதை காட்டும் சிகப்பு விளக்கு

அரசியலுக்கு வந்த பெண்ணை மிக கேவலமாக இணைய தளத்தில் விமர்சிக்கும் திமுகவினரின் செயலை திமுக இணையதள பொறுப்பாளர் MM அப்துல்லா என்பவரின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றோம் இதனால் விஷயம் திமுக தலைமை நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம். அது அல்லாவிடில் நாம் கொடுக்க போகும் பதிலடிக்கும் மிக காட்டமான விமர்சனங்களுக்கும் காதை திறந்து வைத்து கொண்டு அவர்கள் தயாராக இருக்கட்டும் என ஆவேசமாக திமுகவினரை எச்சரித்துள்ளார் ஸ்டான்லி ராஜா.