மதுரை மாவட்டம் உசிலப்பட்டியை சேர்ந்தவர் ஜெயசந்திரன், இவர் திமுக ஐடி பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறபடுகிறது. இவர் தொடர்ந்து முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜகவை சேர்த்த நடிகை காயத்ரி ரகுராம் போன்ற அரசியலில் இருக்கும் பெண் தலைவர்களை பாலியல் ரீதியாக தொடர்ந்து இழிவாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகின்றவர்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இந்த பட்ஜெட் மக்களுக்கு பயனுள்ளதாக அமைத்திருக்கிறது என தெரிவித்த கருத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பெண்ணின் உடையை தூக்கி ஒரு சிறுவன் பார்ப்பது போன்று புகைப்படத்தை பதிவு செய்து எங்கே காட்டு என மிக கீழ்த்தரமாக திமுக நிர்வாகி ஜெயச்சந்திரன் பதிவு செய்திருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஜெயா சமாதியில் நாப்கின் வச்சியடா என மிக கீழ்தரமாக அவர் செய்த பதிவுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியதை தொடர்ந்து, அப்போது அதிமுக அரசு தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திமுக நிர்வாகி ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்ட போது, உடனே களத்தில் இறங்கிய திமுக எம்பி செந்தில்குமார் உடனே திமுக நிர்வாகி ஜெயச்சந்திரனை விடுதலை செய்ய வேண்டும் என குரல் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி விடுவிக்கப்பட்டார், இதே போன்று காயத்ரிக்கு எய்ட்ஸ் வருமா என வாசகம் பொறிக்கப்பட்ட டீசர்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமை இழிவு படுத்து விதத்தில் பதிவு செய்து கடும் எதிப்புக்கு பின் அந்த பதிவை நிக்கி விட்டார், இப்படி திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக இழிவு செய்து வந்த திமுக நிர்வாகி ஜெயச்சந்திரன்.
தற்போது திமுக ஆட்சியிலும் அதை தொடர்ந்து செய்து வருகிறார். பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் ஆடை விலகிய புகைப்படத்தை திமுக நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, மிக கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளது பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
இதனை தொடர்ந்து தொடர்ந்து பெண்களை பாலியல் ரீதியாக இழிவு செய்து வரும் திமுக நிர்வாகி ஜெயச்சந்திரன் மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, தனது சமூக வலைதள பக்கத்தின் User Name மாற்றிவிட்டு தனது டிவீட்டர் கணக்கை தற்காலிகமாக லாக் செய்து விட்டு சமூக வலைதளத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளார், இந்நிலையில் ஏற்கனவே இது போன்ற புகாரில் சிக்கிய திமுக நிர்வாகி ஜெயசந்திரனுக்கு ஆதரவாக களத்தில் குதித்த திமுக எம்பி செந்தில்குமார் இம்முறையும் களத்தில் இறங்குவாரா.? என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.