நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கடும் போராட்டத்துக்கு பின் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு வரை இந்த தொகுதியில் நச்சத்திர வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் இடையே கடுமையான இழுபறி இருப்பதால் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் கமல்ஹாசன் முதல் இடத்தில், இரண்டவாது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் முன்றாவது இடத்தில் வானதி சீனிவாசன் இருந்து வந்தனர், ஆனால் இவர்களுக்குள் வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவில் இருந்து வந்ததால் மும்முனை போட்டி நிலவியது, இந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அனைவரின் பார்வையில் இருந்து இந்த தொகுதி தப்பவில்லை.
இந்நிலையில் மதிய வாக்கு எண்ணிக்கையின் போது கமல்ஹாசன் – மயூரா ஜெயக்குமார் இடையே கடுமையான போட்டி நிலவியது ஆனால் தொடர்ந்து கமல்ஹாசன் முன்னிலை வகித்து வந்தார், வானதி சீனிவாசன் விடாமல் பின் தொடர்ந்து முன்றாவது இடத்தில் தொடர்ந்தார், மாலை வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய வானதி சீனிவாசன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்த கமல்ஹாசனுக்கு கடுமையான போட்டியை கொடுத்தார்.
தொடர்ந்து பரபரப்பாக சென்று கொண்டிருந்த வாக்கு பதிவில் கடைசி சுற்றுகளில் கமல்ஹாசனை முந்தி சென்ற வானதி சீனிவாசன் இறுதியில் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், கோவை தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை ஐபிஎல் கிரிக்கெட் பார்ப்பது போன்று உணர்ந்தனர் மக்கள் அந்த அளவுக்கு கடைசி ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு குறையாமல் இருந்தது, இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது, அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அபிடேட் கேட்டு டிவீட்டர் பக்கத்தில் வானதி சீனிவாசனை டேக் செய்திருந்தார், அதற்கு நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயம் வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என பதில் தந்திருந்தார் வானதி சீனிவாசன். இதனை தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பதிவு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.