வரலாற்று சிறப்பு மிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? குழப்பத்தில் பக்தர்கள்…

0
Follow on Google News

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், கட்சி நிகழ்ச்சிகள், சினிமா படப்பிடிப்புகள், உணவகங்கள், சுற்றுலாத்தலங்கள் கோவில்களும் இவை அனைத்தும் முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டன. நாடு முழுவதும் உள்ள முக்கிய திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது.

இந்த வரிசையில் வரலாறு சிறப்புமிக்க ஒரு திருவிழா தான் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா. உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்று கூட வைக்கும் சித்திரை திருவிழா, கடந்த ஆண்டு கொரோனா‌ காரணமாக நடைபெறவில்லை. இந்தத் திருவிழாவின் சிறப்பே மதுரையின் பட்டத்தரசி மீனாட்சியை சிவபெருமான் கரம் பிடிப்பது தான்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்த மறுநாளே அழகர்கோவிலில் இருந்து அழகர் மலையான் மதுரை மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்க மதுரையில் எழுந்தருளுவார். நாயக்க மன்னரின் ஆட்சி காலத்தில் சைவம் வைணவம் மக்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சினை எழுந்தது. சைவ மக்களின் மீனாட்சி சொக்கர் திருவிழாவையும், வைணவ மக்களின் அழகர் திருவிழாவையும் ஒருங்கிணைத்து சித்திரை திருவிழாவாக மாற்றியமைத்தார்.

சைவ வைணவத்தை இணைந்து 2 மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தினார் நாயக்க மன்னர். பழமையான இந்த வரலாற்று சிறப்புமிக்கசித்திரைத் திருவிழாவை காண கோடிக்கணக்கான மக்கள் கடல்போல் திரண்டு வருவார்கள். மதுரை மக்களால் மிக பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாக காணப்படுகிறது. கோடைகாலத்தின் கோலாகலத் சித்திரைத்திருவிழா, இது வரை என்றும் தடைபட்டது இல்லை, கடந்தாண்டு கொரோனா வைரசால் தடைபட்டது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், அதான் பரவுதல் முழுமையாக குறையவில்லை. ஆனால் மத்திய அரசு பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், சினிமா படப்பிடிப்புகள், கோவில்கள், சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் ஜனவரி மாதம் முன் திறக்கப்பட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு கூட அனுமதி கொடுத்து ஏப்ரல் மாதம் தான் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சித்திரை திருவிழாக்கு அனுமதி கிடைக்குமா? திருவிழா நடைபெறுமா? மதுரையில் கள்ளழகர் எழுந்தருளுவாரா? பல கேள்விகளுடன் பக்தர்கள் குழம்பிப் போயுள்ளனர்…