18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட துவங்கப்பட்டது. மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகின்றனர். பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அரசு தேவைக்கேற்ப மருந்துகள் அளித்து வருகின்றது.
இருந்தும் மக்கள் மனதில் மேலும் அச்சம் தொடர்பாக குருநாத் தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் அதிக அளவில் குரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒரு தடுப்பூசி மருந்து குப்பியை திறக்கும் பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும் ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில் மீதமுள்ள மருந்து வீணாகிவிடும் அந்த வகையில் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது தடுப்பூசிகள் வீணாகும் விதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் உடலில் தேவையில்லாத அசௌகரியங்கள் ஏற்படும் போன்ற வதந்திகளை நம்பி பலரும் தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்களாகிய நாமும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதை தன்னார்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்…