மதிமுக பொது செயலாளர் வைகோ மீது சமீப காலமாக ராசி இல்லாதவர் என தன் மீது கட்டி அமைக்கப்பட்ட ஒரு மாயையை உடைத்து தவிடு பொடியாக்கியுள்ளார் வைகோ, இதற்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வைகோ இடம்பெறும் கூட்டணி தோல்வியை தழுவியதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அவர் ராசியில்லாத ஒரு அரசியல் தலைவர் என்கிற முத்திரை குத்தப்பட்டு பொது வெளியில் ஒரு தரப்பினர் கேலி கிண்டல் செய்து வந்தனர்.
2006 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து வைகோ போட்டியிட்டார், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது, இதன் பின் பொதுவாக வைகோ ராசியில்லாதவர் என்று பரவலாக பேசப்பட்டு, 2011, மற்றும் அதற்கு பிறகு ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை நடந்த அணைத்து தேர்தல்களிலும் மதிமுக அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும் திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் மூலம் அதிமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்தார் வைகோ.
இதனிடையே 2011 ல் தேர்தலில் வைகோ அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, இதன் பின்பு நடந்த 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை உருவாக்கி எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அந்த தேர்தலுடன் தேமுதிக அரசியலுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டார் வைகோ என பரவலாக பேசப்பட்டது.
இதன் பின்பு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நடந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்த வைகோ, திமுக வெற்றிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்,இந்த தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது, இதன் பின்பு கடந்த 4 வருடங்களாக எந்த ஒரு முக்கிய நபர்கள் ஏதேனும் துறையில் தோல்வி அடைந்தால் அவர்கள் வைகோ உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வைகோ கேலி கிண்டலுக்கு உள்ளவார்.
இதற்கு அனைத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் வைகோ கூட்டணியில் இடம்பெற்ற திமுக கூட்டணி நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது, மேலும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயன் விஜயன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து , அவர்களுடன் வைகோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது, இதுவரை வைகோவை கேலி கிண்டல் செய்து வந்தவர்கள் முகத்தில் கறியை பூசுவது போன்று அமைந்துள்ளது.