3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக கணவரை மனைவி காரோடு வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். ரங்கராஜன் செய்துவந்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் ரங்கராஜன் தவித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி விடுகிறார். விபத்தில் சிக்கிய ரங்கராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். ரங்கராஜனுக்கு விபத்து ஏற்பட்ட காயங்கள் குணமடைய மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தன் மனைவி ஜோதிமணி உடன் வியாழக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர்களுடன் ரங்கராஜனின் தங்கை மகனான ராஜாவும் பயணித்துள்ளார்.ரங்கராஜன் மூன்று கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்து வந்துள்ளார். இந்த 3 கோடி இன்சூரன்ஸ் திட்டத்தில் தனது மனைவி ஜோதி மணியை நாமினியாக நியமித்துள்ளார். ஆனால் மனைவி ஜோதிமணி கணவரின் தங்கை மகன் ராஜாவுடன் இணைந்து இந்த 3கோடி இன்சூரன்ஸ் தொகையை பெற தனது கணவர் ரங்கநாதனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
ஆனால் இந்த விஷயம் தெரியாமல் ரங்கராஜன் மருத்துவமனையில் இருந்து இவர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். இவர்கள் சென்று கொண்டு இருந்த கார் திடீரென்று தீ பிடித்ததாகவும், அதில் இவர்கள் ஜோதிமணியின் ரங்கராஜனின் தங்கையின் மகனும் தப்பி விட்டதாகவும் ரங்கராஜன் காப்பாற்ற முடியாமல் தீயில் கருகி விட்டதாகவும் கதையை உருவாக்கி விட்டனர்.
ஆனால் நடந்ததோ வேறு என்பதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போதுதான் உண்மை வெளிவந்தது. மனைவி ஜோதிமணியும் தங்கை மகன் ராஜாவும் சேர்ந்து தான் ரங்கராஜனை பெட்ரோல் ஊத்தி கருடன் எரித்து கொன்றது தெரியவந்தது. 3 கோடிக்காக கணவனை கொன்ற மனைவி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.