தேர்தல் முடித்ததும் ஸ்டாலின் சேட்டைகள் தொடரும் ? குரங்குடன் ஒப்பிட்டு பேராசிரியர் விளக்கம்.!

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்களிடம், திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இந்துகளுக்கு எதிராக பேசிவருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சி, வெளிப்படையாக இந்து விரோத போக்கை திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் போன்றவைகள் தயங்குவதில்லை. திருமாவளவன் சமீபத்தில் இந்து எதிர்ப்பில் உச்சத்திற்கே சென்று பேசி வருகிறார்.

இதற்கெல்லாம் என்ன பின்னணி என்றால் தமிழ்நாட்டில் ஒரு De Hinduisation நடந்துகொண்டிருக்கிறது, ஒரு இந்துவை தான் ஒரு இந்துவாக இருப்பதைப் பற்றி எந்த விதமான நம்பிக்கையும், பெருமையும் மகிழ்ச்சியும் இருந்துவிடக்கூடாது என நினைப்பவர்கள் அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார்கள், அதன்மூலம் மதமாற்றம் செய்து விடலாம் என நினைக்கிறார்கள், இந்துக்களின் நம்பிக்கையை பெருமளவு குறைத்திட முடியும், இதனால் மதமாற்றம் செய்து விட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இதுபோன்ற De Hinduisation முழு நேர வேலையாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்கின்றன, ஒரு பக்கம் தான் நாத்திகர், கடவுள் மறுப்பாளர் என்று கூறுவது, ஆனால் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர், இந்த பருப்பு ரொம்ப நாளைக்கு விலை போகாது என தெரிவித்த பேராசிரியர் மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும், இந்த சக்திகள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் திராவிட கழகம் சார்பில் இந்துக்களுக்கு எதிரான மயக்க பிஸ்கட் என்ற நூல் வெளியீட்டை வெளியிட வேண்டாம் என ஸ்டாலின் தடுத்து நிறுத்தியதாக வெளி வந்துள்ள செய்தி குறித்து பேராசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தேர்தல் நேரம் பயம் தான் இதற்கு காரணம் என்றும்,ஸ்டாலினுடைய கொள்கை இது கிடையது, அது தேர்தல் வியூகம், அந்த மயக்க பிஸ்கட்டை மே மாதத்திற்கு பின்பு வெளியிடுவார்கள் என குறிப்பிட்ட பேராசிரியர்.

கொஞ்ச நேரம் குரங்கு தனது சேட்டையை நிறுத்தி வைத்துள்ளதால் குரங்கு தனது சுபாவத்தை மாற்றிவிட்டது என்று நம்பக்கூடாது, திமுக என்பது சேட்டை பண்ண கூடிய கட்சிதான் தற்போது கொஞ்ச நேரம் தனது சேட்டையை நிறுத்தி வைத்துள்ளது, ஒரு ரிங் மாஸ்டர் போன்று மக்கள் இருப்பார்கள் என்ற அச்சத்தில் தமக்கு எதிராக போய்விடக்கூடாது என்பதற்காக நிறுத்தி வைத்துள்ளார்கள், தேர்தல் முடிந்ததும் இந்து எதிர்ப்பை தொடர்வார்கள், அவர்கள் சுபாவம் மாறாது என குரங்குடன் திமுக தலைவர் ஸ்டாலினை ஒப்பிட்டு விளக்கம் அளித்தார் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்.