கருணாநிதியை காவியேகதி ஆக்கிய தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என வாஜ்பாய் அவர்கள் குறித்து பிரபல பத்திரிகையாளரும் பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், இந்திய அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஆட்சிகாலத்தில் முக்கியமான வளர்ச்சித்திட்டங்களுக்கு அடித்தளமிட்டவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் வாஜ்பாயிக்கு கண்டனம் தெரிவித்தன; பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
அப்போது “நம்மிடம் அணுகுண்டு வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது; ஆனால் அதை ஒருபோதும் ஆத்திரத்தில் பயன்படுத்தமாட்டோம்” என முழங்கினார். இந்தியாவும் 1999இல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைந்தது. மேலும் எல்லா குழந்தைகளும் கல்வி கற்றிடவேண்டுமென சர்வ சிக்ஷா அபியான் எனும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை இந்தியாவின் பாதைகளற்ற கிராமங்களில் கூட புகுத்தினார். இத்திட்டத்தினால் ஆரம்பக்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பல்மடங்கானது; பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஒரு நாட்டின் உட்கட்டமைப்பு வளர சாலைகள் அவசியம்; இந்தியாவின் முக்கியமான வணிகத் தொடர்பு சாலைகளை இணைத்து தங்கநாற்கரசாலை திட்டத்தை 1998இல் துவங்கி வெற்றிகரமாக சாலைகள் அமைக்கப்பட்டன.
இன்றைக்கு தொலைதொடர்பு வளர்ச்சி இந்தியாவில் வானளவு உயர்ந்திட அதிமுக்கியமான காரணம் அவர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலைதொடர்பு கொள்கை. ஆட்சியிலும் நிர்வாகத்திலும் மட்டும் நல்ல தலைமையாகயின்றி அரசியலிலும் அதிசிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தார். 1998இல் ஆட்சி ஆட்சி கவிழும் நிலையில் 1999 ஏப்ரல் 15 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் முரசொலி மாறன் பாஜக அரசுக்கு ஆதரவை அளித்தார். அத்தோடு பாஜக கூட்டணியில் இருக்கும்போது சமூகநீதி சமத்துவம் பேசும் கருணாநிதியை “ஜெயலலிதாவின் ஊழலைவிட மதவாதம் கொடுமையானதல்ல” என்று கருணாநிதியின் பச்சோந்தித்தனத்தை வெளிக்கொணர்ந்தது வாஜ்பாய் ஆட்சியிலான பாஜக கூட்டணி.
கார்கில் போர் குறித்த முதல்வர்கள் மாநாடில் கருணாநிதி தமிழகத்தின் சார்பாக 15 கோடி, 25 கோடி, 10 கோடி என இந்தியாவில் கார்கில் போர்நிவாரணத்திற்கு அதிகம் வழங்கிய மாநிலம் எனும் பெருமையோடு வாஜ்பாயிக்கு வழங்கினார். மேலும் ஈழத்தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை மேற்கொண்டார் வாஜ்பாய். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
இவர் ஆட்சிக் காலத்தில் மும்பையிலிருந்து இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை துணிவுடன் தடுத்து ஆணையிட்டார். தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட பிரதமராக இரும்புமனிதராக பதவியின் வலிமை அறிந்து செயல்பட்டவர். இதே கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் ஈழத்தமிழர் பிரச்சனையின்போது ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவமுடியுமென பிற்காலத்தில் ஓலமிட்டார். அரசியலை விட தேசமே முக்கியம் என்று முழங்கிய வாஜ்பாய் எனும் அதிசிறந்த ஆளுமையின் பிறந்தநாளில் அவர்தம் செயல்திறனை நினைவுகூர்வோமாக என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.