கடந்த 21ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார், அவரது பாதுகாப்புக்கு சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வந்துள்ளார். முதல்வர் நிகழ்ச்சி முடித்ததும் பாதுகாப்புக்கு சென்ற உயர் அதிகாரி சென்னைக்கு புறப்பட்டார். டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னைக்கு புறப்படுவதை தொடர்ந்து, அவர் செல்லும் ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பினர்.
அதில் ஒரு மாவட்டத்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனது மாவட்ட எல்லையில் டிஜிபி ராஜேஷ் தாஸ் வரவேற்றார். அப்போது அந்த பெண் அதிகாரியைப் பார்த்ததும் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும். காரில் ஏறுங்கள் என்று டிஜிபி ராஜேஷ் தாஸ் சொன்னதாக கூறபடுகிறது, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி காரில் ஏறியதும், நைசாக பேச்சுக் கொடுத்தவர், திடீரென பெண் அதிகாரியின் மீது கையை வைத்து, பாலியல் சீண்டலில் அந்த டிஜிபி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி. இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம்’ என கடுமையாக எச்சரித்ததை மீறி தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், கடுமையாக கண்டித்து காரில்
இருந்து வேகமாக இறங்கி, தனது காரில் ஏறி சென்று விட்டார்.இதன் பின்பு தனக்கு நடத்த பாலியல் சீண்டல் குறித்து பெண் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர்
ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழக காவல் துறை வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக போது மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜேஷ் தாஸ் சக பெண் காவல் துறை உயர் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பறகு தான் மீண்டும் பணிக்கு வந்தார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த பாலியல் புகார் குறித்து உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வரிடம் டிஜிபி திரிபாதி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதை தொடர்ந்து, பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியதாக முதல்வர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.