கருணாநிதி மகனும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான முக அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவுக்கு எதிராக பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது, திமுகவின் தென்மண்டல ஆளுமையாக திகழ்ந்த முக.அழகிரியை அரசியலில் இருந்து ஓரம் கட்டிய முக.ஸ்டாலின், இதற்கு முன் கருணாநிதி குடும்ப கட்சியாக இருந்த திமுகவை ஸ்டானின் குடும்ப கட்சியாக மாற்றியுள்ளார், இந்நிலையில் தன்னை அரசியிலில் இருந்து ஓரம் கட்டிய ஸ்டாலின் எக்காரணத்தை கொண்டும் தமிழக முதல்வராக வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் முக அழகிரி.
இந்நிலையில் நீண்ட நாட்களாக பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் இருந்து வந்த முக அழகிரி, நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சிக்காக காத்திருந்தார், ஆனால் தற்போதையில் இருக்கும் சுழலில் நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றும், ஆனால் வரும் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்ற தகவல் முக அழகிரிக்கு சென்ற நிலையில், பாஜகவில் இணைவது என முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் பாஜகவில் இணைய இருக்கும் முக அழகிரியுடன் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா உட்பட திமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏ கள் மற்றும் திமுக முக்கிய புள்ளிகள் முக அழகிரியுடன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு அழைத்து வந்தது முக அழகிரி என்பதால் மேலும் அவர் முக அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர், இந்நிலையில் முக அழகிரி உடன் பாஜகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் தென் மாவட்டத்தை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக முக்கிய புள்ளிகள் முக அழகிரியுடன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தென்மாவட்டத்தில் கூண்டோடு திமுக காலியாகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
திமுகவில் இருக்கும் முக அழகிரியின் ஆதரவாளர்கள் பட்டியல் மத்திய உள்துறை அமித்ஷாவிடம் ஒப்படைக்க பட்டுள்ள நிலையில், அழகிரி ஆதரவாளர்களுடன் தமிழக பாஜக தலைவர்கள் தொடர்பில் இருந்து வர தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்சா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து யார் யாருடன் தொடர்பில் இருந்து வரவேண்டும் என்கிற எல்.முருகன் ஆலோசனை படி பாஜகவின் தலைவர் திமுக இருக்கும் அழகிரி ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.