யார் இந்த ராஜகோபாலன் ? பத்மா சேஷாத்ரி பள்ளிய மாணவிகளுக்கு நடந்தது என்ன.? முழு விவரம் உள்ளே..

0
Follow on Google News

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்துவதும், மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

யார் இந்த ராஜகோபாலன் ?
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் நடத்துபவர். இருபது ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறார். மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பழகி வந்துள்ளார். பள்ளிகள் நடைபெற்ற வேலையில் வகுப்புகளில் இரட்டை அர்த்தங்கள் உடன் பேசுவதும் மாணவிகளை தொட்டுப் பேசி பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக பயமுறுத்தியும் வந்துள்ளார்.

ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மேலும் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.
பள்ளியில் ராஜகோபாலன் செய்ததை பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்தனர். மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர் ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை பள்ளி நிர்வாகம் ஆசை ராஜகோபால் அவனை கூப்பிட்டு வார்னிங் மட்டுமே செய்து அனுப்பியது. இது ஆசிரியர் ராஜகோபாலுக்கு வசதியாக போய்விட்டது. மேலும் இவரது சேட்டைகள் அதிகரித்தது.

ராஜகோபாலன் சிக்கியது எப்படி?
கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அப்படி ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். வாட்ஸ் அப்பில் மாணவிகளின் உடல் அங்கங்களை வர்ணித்து முசிக் செய்துள்ளார். பொறுத்தது போதும் பொங்கிய மாணவிகள் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தும் போது அதை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவு செய்துவிட்டனர்.

இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த அரசியல் தலைவர்கள் மாஜி மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற எம்பியுமான கலாநிதி மாறன், கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்பி கனிமொழி என பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டன குரல் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்னால் மாணவி துணிச்சலாக முன்வந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் ராஜகோபலன் மீது புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரை குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு டிஎஸ்பி ஜெயலட்சுமி பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிறகு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர் ராஜகோபாலன் நடந்ததை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார்.

ராஜகோபாலன் லேப்டாப் கைப்பற்றியது போலீஸ்: ஆசிரியர் ராஜகோபாலன் லேப்டாப்பை போலீஸார் கைப்பற்றியது. லேப்டாப்பை ஆய்வு செய்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ராஜகோபாலனிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் இவரது மூன்று நண்பர்களுக்கு மாணவிகளின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அவர்கள் இவருடன் வேலை செய்யும் சாக ஆசிரியர்கள் நண்பர்களும் கூட. இவர் அனுப்பும் மாரவிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்து இந்த முன்று பேரும் அந்த புகைப்படத்தில் உள்ள மாணவிக்கு பாலியல் தெந்தரவு செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மாணவிகள் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தும் என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இந்த மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் இடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 94447 72222 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் புகார் அளிக்கலாம் புகார் அளிப்பவர்கள் குறித்து விவரம் பாதுகாக்கப்படும். இதுவரை 28 பேர் புகார் அளித்துள்ளனர் அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.