யார் இந்த கனகராஜ்.? அடக்குமுறைக்கு அஞ்சாமல் கட்சி நிர்வாகி விடுதலைக்கு களத்தில் இறங்கி சிக்ஸர் அடித்த பாஜக மாவட்ட தலைவர்.!

0
Follow on Google News

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருகின்றவர் கனகராஜ், திண்டுக்கல் மாவட்ட பரபரப்பு அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார், அவர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாஜக அடிமட்ட நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் களத்துக்கு விரைந்து வந்து சரி செய்யக்கூடிய ஒரு மாவட்ட தலைவர், இது தான் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் பாஜகவில் இளைஞர்கள் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய போது, தமிழக பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணிகள் நடைபெற்ற போது, பழனியில் சுமார் ஐந்து ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணியை மாநில முக்கிய தலைவர்களை அழைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் அந்த மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ். இந்த பேரணிக்கு அனுமதி கொடுத்ததை கண்டித்து பழனியில் இருக்கும் குறிப்பிட்ட சில அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் தொடர்ந்து ஒரு வரமாக நடைபெற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார் கனகராஜ். இதனை தொடர்ந்து பெரும் பரபரப்பு அந்த பகுதியில் நிலவியது, ஆனால் குறிப்பிட்ட அமைப்பினர் மறியல் போராட்டத்தை நிறுத்தினால் தான் நாங்கள் போராட்டத்தை நிறுத்துவோம் என கனகராஜ் உறுதியாக இருந்ததை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட அமைப்பினர் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

இதே போன்று தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேல் யாத்திரை பழனி முக்கியத்துவம் பெற்றது, மாவட்ட தலைவர் கனகராஜ் ஏற்பாட்டில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்த வேல் யாத்திரையின் போது கலந்து கொண்டவர்கள் கையில் தொலைபேசி விளக்கை காண்பித்த ஒளி கொடுத்த நிகழ்வு எதிர்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மேலும் இந்த நிகழ்வு இந்திய அளவில் வைரலானது.

இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் திமுக நிர்வாகி உடன் அரசியல் விவாதம் செய்த திண்டுக்கல் மாவட்ட பாஜக நிர்வாகி சரவணன் கைது செய்ததை அறிந்த மாவட்ட தலைவர் கனகராஜ் காவல் நிலையம் சென்றார். அங்கே திமுக நிர்வாகி மீது தான் தவறு, பாஜக நிர்வாகி கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளார். ஆனால் காவல்துறை தாமதம் செய்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.

உடனே கனகராஜ் உட்பட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர், ஆனால் கைது செய்யப்பட்ட நாங்கள் பாஜக நிர்வாகி விடுதலை செய்யும் வரை நாங்கள் விடுதலையாக மாட்டோம் என உறுதியாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் மாவட்ட தலைவர் கனகராஜ். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அணைத்து பகுதிகளிலும் பாஜகவினர் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக பாஜக தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சரவணன் உடன் அநாகரீமாக விவாதம் செய்து பாஜக நிர்வாகி மீது போலீஸ் புகார் தெரிவித்த திமுக நிர்வாகி கணேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , பாஜக நிர்வாகி சரவணன் விடுதலை செய்யப்பட்ட பின்பு தான் மாவட்ட தலைவர் கனகராஜ் உடன் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையானார்கள், இந்நிலையில் அரசியல் ரீதியாக பாஜக தொண்டர்கள் சந்திக்கு அடக்கு முறைக்கு எதிராக களத்தில் குதித்து காவல் நிலையத்தில் இருந்து பாஜக நிர்வாகியை மீட்ட திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை முக்கிய பாஜக தலைவர்கள் , தொண்டர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.